விஜயகாந்தின் வலது காலில் இருந்து 3 விரல்கள் அகற்றம்!

நடிகரும், தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலமின்றி இருந்து வருகிறார். அவர் அவ்வப்போது பரிசோதனைக்காக மருத்துவ மனை செல்வது வழக்கம்.  இந்நிலையில்  சில வாரங்களுக்கு முன்னர் மருத்துவ பரிசோதனைக்காக  தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அப்போது விஜயகாந்துக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரது வலது காலில் ரத்த ஓட்டம் சீரற்ற நிலையில் இருந்து வந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. இக்காரணத்தால் அவருக்கு  வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.  இதில் வலது காலில் இருந்து 3 விரல்கள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.