தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சரண்ராஜ்! நீண்ட நாட்களாக திரையுலகினில் இருந்து விலகியிருந்தவர், தற்போது இயக்குனராக தமிழ் திரையுலகினில் பிரவேசிக்கிறார். குப்பன் என பெயரிடப்பட்ட இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதோடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
குப்பன் படம் குறித்து நடிகர் சரண்ராஜ் கூறியதாவது….
‘சென்னை பாலவாக்கத்தில் கடந்த 30வருடங்களுக்கு மேலாக வசித்து வருகிறேன். தினமும் பாலவாக்கம் கடற்கரையில் நடை பயிற்சி செயவது வழக்கம். அப்போது எனக்கு பலருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்படி பழக்கமாமனவர் தான் குப்பன் என்ற மீனவர். அவருடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னிடம் பகிர்ந்த கொண்ட விஷயங்கள் என்னை கவர்ந்தது. இந்த விஷயங்களை ஏன் படமாக்கக்கூடாது என்ற கேள்வி என்னுள் எழுந்ததன் விளைவு தான் குப்பன் படம் உருவாக காரணம்’. என்றார்.
குப்பன் படத்தில் நடிகர் சரண்ராஜின் இரண்டாவது மகன் தேவ் சரண்ராஜ் நாயகனாக அறிமுகமாகிறார். இவர் ஒரு பைலட். படத்தில் நடிப்பதற்காக நடிப்பு பயிற்சி எடுத்துள்ளார். இவருடன் இன்னொரு கதாநாயகனாக ஆதி தேவ் என்பவரும் அறிமுகமாகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை பாலவாக்கத்தில் சுற்றுவட்டாரம் மற்றும் விசாகப்பட்டினம், ஐதராபாத் போன்ற இடங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது.