தாதா87

இது தாதா கதையா,தாத்தா கதையா என்கிற அளவுக்கு சாருஹாசனை வைத்து படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி ஒரு பில்ட் அப் கொடுத்திருந்தார்.

அதற்கேற்ப சாரு அண்ணாவும் தம்பி கமலின் சத்யாவை மனதில் வைத்துக் கொண்டு கீர்த்தி சுரேஷின் நிஜ பாட்டி மீது ஒரு கண் வைத்திருக்கிறார்.ஆனால் படம் இவர்களை பற்றியதில்லை. ஆனந்த் பாண்டிக்கும் ஸ்ரீ பல்லவிக்கும் இடையில் நடக்கும் காதலைப் பற்றியது.

ஆனந்த் விரட்டி விரட்டி காதலித்தும் மசியாத ஸ்ரீ பல்லவி ஒரு கட்டத்தில் காதலிக்க சம்மதித்து லிப் கிஸ் வரை போய் விடுகிறார்.அதை ரசித்து சுவைத்து அனுபவித்தவர் பினாயில் போட்டு வாயைக் கழுவும் நிலைக்கு தள்ளப்பட்டதேன்? “அங்கேதான் இருக்கிறது ஆச்சாரியாரின் மூளை” என கலைஞர் கருணாநிதி ஒரு படத்தில் எழுதிய வசனம் நினைவுக்கு வருகிறது.

திருநங்கை என்கிற ஒன்றை வைத்து இயக்குநர் பின்னிய கதை வலுவிழந்து தள்ளாடுகிறது.
நடக்க முடியாத சாரு அண்ணாவை பீச்சில் நடக்க வைத்து இமாஜினேஷன் ஷாட் ,இதைப் போல ஜனகராஜ்க்கும் சில காட்சிகள். ஸ்ரீ பல்லவி பிழைத்துக் கொள்வார். மறுப்பிலாமல் துணிகரமான கேரக்டரில் நடித்திருப்பது வரவேற்புக்குரியது.