ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் மே 6 ஆம் தேதி பிரைம் வீடியோவில் வெளியாகும் படம், சாணி காயிதம். இதில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் வெளிவரவுள்ள சாணி காயிதம் படத்தின் டிரெய்லரை பிரைம் வீடியோ இன்று வெளியிட்டது. பழிக்குப் பழி வாங்கும் கதைக்களம் கொண்ட இப்படத்தை பிரைம் வீடியோவில் 6 May முதல் பிரத்யேகமாக 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் திரையிடப்படுகிறது. இப்படம் தெலுங்கில் ‘சின்னி’ என்றும் மலையாளத்தில் ‘சாணி காயிதம்’ என்றும் வெளிவருகிறது.
கான்ஸ்டபிளாகப் பணிபுரியும் பொன்னி (கீர்த்தி சுரேஷ்) தனது ஐந்து வயது மகள் தனா மற்றும் அரிசி ஆலையில் கூலியாளாகப் பணிபுரியும் அவரது கணவர் மாரி ஆகியோருடன் சேர்ந்து வாழுந்துவரும் ஒரு இரவில், அவள் அனைத்தையும் இழக்க நேரிடுகிறது, தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பழிவாங்க, சங்கையாவின் (செல்வராகவன்) ஆதரவைப் பெறுகிறாள். இது தான் படத்தின் கதை.
தனது கதாபாத்திரம் குறித்து கீர்த்தி சுரேஷ் பேசுகையில்,
“இது வரை நான் நடித்த கதைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதை பாணியை ‘சாணி காயிதம்’. அனுபவமில்லாத அதே சமயம் உணர்ச்சிகரமான கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். என்னுடைய பாத்திரமும், இயக்குநர் அருணின் தனித்துவமான கதை சொல்லும் பாணியும் தொலைநோக்குப் பார்வையும்தான் இந்த கடினமான படத்தின் ஒரு பகுதியாகப் பங்கேற்க என் ஆர்வத்தைத் தூண்டியது. இயக்குனர் செல்வராகவன் உடன் நடிக்கக் கிடைத்த வாய்ப்பு மேலும் சிறப்பைச் சேர்த்தது! இந்த பாத்திரத்தில் நான் ஆத்மப் பூர்வமாக பங்கேற்றுள்ளேன். விமர்சனத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.” என்றார்..
இயக்குனர் செல்வராகவன் கூறுகையில்,
‘ நான் முதல்முறையாக கேமராவின் முன்னால் நின்று நடித்ததால் ‘சாணி காயிதம்’ எனக்கு ஸ்பெஷலான படமாகும். ஒரு சக்தி வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க மற்றும். திறமையான கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடிக்கக் கிடைத்த வாய்ப்பு மகிழ்ச்சியைத் தந்தது. இயக்குனர், அருண் மாதேஸ்வரன், மிகவும் தேர்ச்சி பெற்றவர் . கதையிலும் கலைஞர்களிடமிருந்தும் முழுமையான திறனை வெளிப்படுத்தியுள்ளார். என்றார்.