நடிகர் காளிதாஸ் ஜெயராம் தமிழ் திரையுலகில் வேகமாக முன்னேறி வரும் நடிகர்களில் ஒருவர். சமீபத்தில் வெளியான விக்ரம், பேப்பர் ராக்கெட் வெப் சீரிஸ் மற்றும் நட்சத்திரம் நகர்கிறது போன்ற படங்களில் தனித்துவமான கதாபாத்திரங்களில் சிறந்த நடிப்பிற்காக ரசிகர்களிடத்தில் பாராட்டுகளைப் பெற்றவர். அவர் இப்போது இயக்குனர் பாலாஜி மோகனின் இயக்கத்தில் ஒரு ரொமென்டிக் என்டர்டெய்னர் படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படம் குறித்து நடிகர் காளிதாஸ் ஜெயராம் கூறும்போது..,
பாலாஜி மோகன் இயக்கிய வாயை மூடி பேசவும், மாரி, மாரி 2 உள்ளிட்ட படங்கள் எனக்கு மிகவும் பிடித்த படங்கள். நல்ல ஜாலியான இயக்குனருடன் இணைந்து பணியாற்றியது ஒரு சிறந்த அனுபவம். அவருடன் ஒரு சூப்பரான ரொமென்டிக் என்டர்டெய்னர் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாய் இருக்கிறது. தற்போது லண்டனில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. திறமையான நடிகைகளான அமலா பால், துஷாரா விஜயன் இணைந்து நடிப்பது புதிய அனுபவமாக இருக்கிறது. ஜாலியான ஒரு ரொமென்டிக் என்டர்டெய்னராக இந்தப்படம் இருக்கும்.