சோழ நாட்டு மன்னன் சுந்தர சோழனுக்கு (பிரகாஷ்ராஜ்) ஆதித்த கரிகாலன் (விக்ரம்), குந்தவை (த்ரிஷா) என அருண் மொழிவர்மன் (ஜெயம் ரவி), மூன்று பிள்ளைகள்.
வயதான நிலையில் சுந்தர சோழன் நோய்வாய்பட்டு ஓய்வெடுத்து வருகிறார். ஆதித்த கரிகாலனும், அருண் மொழிவர்மனும் வெவ்வேறு திசைகளில் போரிட்டு வருகின்றனர். குந்தவை மன்னரின் அருகிலிருந்து கவனித்து வருகிறார்.
அரண்மனையின் கட்டுப்பாட்டினை சுந்தரசோழரின் நிதியமைச்சர் பெரிய பழுவேட்டரையரை (சரத்குமார்) தன்வசம் முழுவதும் கொண்டுவர தனது மனைவி நந்தினியின் (ஐஸ்வர்யா ராய்) ஆலோசனைப்படி செயல்பட்டு வருகிறார். அதோடு சுந்தரசோழரின் வாரிசுகளான கரிகாலனுக்கும், அருண்மொழி வர்மனுக்கும் உயிராபத்து ஏற்படுகிறது.
இயக்குனர் மணிரத்னம், கதாபாத்திரங்களுக்கேற்ற வகையில் நடிகர்களை தேர்ந்தெடுத்து இருப்பது படத்தின் மிகப்பெரிய பலம். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், பிரபு, பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலரும் சிறப்பான நடிப்பினை கொடுத்திருக்கின்றனர்.
பொன்னியின் செல்வனின் கதை பற்றி கேட்டோ, படித்தோ தெரியாமலிருந்தால் முதல் பாதி அவர்களுக்கு புரியாது. இரண்டாம் பாதியில் சிலருக்கு புரியும். காட்சிகளுக்கு முன், பின் தொடர்பு இல்லாமலிருக்கிறது.
ஏ.ஆர். ரஹ்மான் இசையும், ரவிவர்மன் ஒளிப்பதிவும் படத்தின் பெரும்பலமாக இருக்கிறது. ஒரு சில இடங்களை தவிர கிராபிக்ஸ் காட்சிகளில் நம்பகத்தன்மை இருப்பது படத்தின் மற்றொரு பலம். அரண்மனை தோட்டா தரணியின் அரண்மனையின் செட்டுகளுக்கு கிராபிக்ஸும் உதவியுள்ளது.
நாவலில் இருக்கும் சிலகாட்சிகளை தவிர்த்தும் இல்லாத காட்சிகளை இணைத்தும் இருக்கிறார்கள். இப்படத்தில் வாய்பிளந்து பார்க்கும் காட்சிகளோ, ரசிகர்கள் தன்னை மறந்து ஆராவாரம் செய்யவோ போதுமான காட்சிகள் இல்லாதது வெகுஜன ரசிகனுக்கு பெரும் ஏமாற்றம்! வேறு குறைகள் எதுவும் பெரிதாக இல்லை!
பொன்னியின் செல்வன் – பார்க்கலாம்!