தக்ஸ் – விமர்சனம்!

டினு பாப்பச்சன் இயக்கத்தில், மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம், ‘ஸ்வாதந்தர்யம் அர்த்தராத்திரியில்’. இதில் கதாநாயகனாக ஆண்டனி வர்கீஸ் நடித்திருந்தார். இப்படம் தமிழில் ‘தக்ஸ்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது. இதில் அறிமுக நாயகன் ஹிருது ஹாரூன் நடித்துள்ளார். எப்படி இருக்கிறது, தக்ஸ்?

ஆயுள் தண்டனை கைதி ஹிருது ஹாரூன். அவர் தனது காதலியுடன் வெளிநாடு செல்ல சிறையிலிருந்து தப்ப முயற்சிக்கிறார். ஏன், எதற்கு? என்பதே தக்ஸ் படத்தின் கதை.

அறிமுக நாயகன் ஹிருது ஹாரூன், முதல் சில காட்சிகளிலேயே, அவர் சிறந்த நடிகர் என்பதை நிரூபித்து விடுகிறார். குறிப்பாக காதலியை சீண்டிய ரௌடியை விரட்டி, விரட்டி அடிக்கும் சண்டைக்காட்சியே அதற்கு சாட்சி!  அவரது கண்கள், ஆக்‌ஷன் காட்சிகளில் அணல் தெறிக்கவும், காதல் காட்சிகளில் குளிரவும் செய்கிறது. துடிப்பான அவரது இளமையும், நடிப்பும் கோலிவுட்டில் அவருக்கான ஒரு இடத்தை உறுதி படுத்துகிறது.

நாயகியாக நடித்திருக்கும் அனஸ்வரா ராஜா, பெரிதாக மனதை கவரவில்லை!

சில காட்சிகளில் நடித்திருந்தாலும், சிம்மமாக சிலிர்க்கிறார், பாபி சிம்ஹா.

ஜெயில் வார்டனாக நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ், கண்களை உருட்டி, மிரட்ட முயற்சித்திருக்கிறார்!?

முனிஷ்காந்த், சிறப்பு கவனம் பெறுகிறார். மற்றபடி, இரட்டை சகோதர்கள் அருண் – ஆகாஷ், அப்பானி சரத், பி.எல்.தேனப்பன், ஆல்வின் என அனைவரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமாக நடித்திருக்கின்றனர்.

ஒளிப்பதிவாளர் பிரியேஷ் குருசாமி காட்சிகளை கச்சிதமாக படமாக்கியிருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளை அட்டகாசமாக படமாக்கியிருக்கிறார். ஜெயிலில் இருந்து தப்பிக்கும் காட்சிகள் நகம் கடிக்க வைக்கிறது.

இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்.ஸின் பின்னணி இசை பாதி ‘சத்தம்’! மீதி பரவாயில்லை! காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது.

இயக்குநர் பிருந்தா, ‘ஸ்வாதந்தர்யம் அர்த்தராத்திரியில்’ படத்திற்கு சிற்சில சேதாரத்தை ஏற்படியிருந்தாலும், பெரிதாக குறை எதுவும் இல்லை1

‘தக்ஸ்’ ஆக்‌ஷன் பிரியர்களுக்கான படம்!