‘மார்டன் லவ் சென்னை’ இசை ஆல்பம் வெளியீடு!

முதன் முறையாக மேஸ்ட்ரோ இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் ஷான் ரோல்டன் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ள ‘மார்டன் லவ் சென்னை’ தொடரின் ஆன்மாவைத் தூண்டும் இசை ஆல்பத்தை, அமேசான் ப்ரைம் வெளியிடுகிறது

ஒன்றுக்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் இணையும் இந்த ஆல்பத்தில் மேஸ்ட்ரோ இளையராஜா, யுக பாரதி மற்றும் பாக்கியம் சங்கர் எழுதிய பாடல்களை ஷிவானி பன்னீர்செல்வம், வாகு மசான், ரம்யா நம்பீசன், கிறிஸ்டோபர் ஸ்டான்லி, அனன்யா பட், பிரியா மாலி மற்றும் பத்மப்ரியா ராகவன் போன்ற திறமையான பாடகர்கள் பாடியுள்ளனர்.

மாடர்ன் லவ் சென்னை இசை ஆல்பத்தில் 14 பாடல்கள் மற்றும் 4 இசைக்கருவிகளின் ஒலித் தொகுப்புகளும்  உள்ளன, அவை இப்போது அனைத்து முன்னணி இசை தளங்களிலும் கிடைக்கின்றன.

அமேசான் ஒரிஜினல் தொடர் மே 18 அன்று இந்தியாவிலும், உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் திரையிடப்படும்.

Click for Music Album Here – https://smi.lnk.to/ModernLove-Chennai

Title Track lyrical video here – https://youtu.be/ZDsJkLGgs_w 

மாடர்ன் லவ் சென்னையில் ஆறு அத்தியாயங்களில் 14 அசல் பாடல்கள் மற்றும் 4 இசைக்கருவிகளின் தொகுப்பு உள்ளது, அவை தமிழ் திரை இசைத்துறையைச் சேர்ந்த நான்கு திறமையான இசையமைப்பாளர்களால் இயற்றப்பட்டுள்ளன.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஆல்பத்தில் பின்வரும் பாடல்கள் உள்ளன-

  1. யாயும் ஞானமும் (முகப்பு பாடல்) – இந்தப் பாடலுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், யுக பாரதியின் பாடல் வரிகள் மற்றும் ஷிவானி பன்னீர்செல்வம் பாடியுள்ளார்.
  2. ஜிங்க்ருதா தங்கா (அத்தியாயம்: லாலகுண்டா பொம்மைகள்) – பாக்கியம் சங்கரின் பாடல் வரிகளில் ஷான் ரோல்டன் இசையமைத்துப் பாடியுள்ளார்.
  3. நெஞ்சில் ஒரு மின்னல் (அத்தியாயம்: மார்கழி) – இளையராஜா இசையமைத்து எழுதி பாடியுள்ளார்
  4. குக்குன்னு (அத்தியாயம்: காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற எமோஜி) – இசையமைத்தவர் ஜி.வி. பிரகாஷ் குமார், பாடல் வரிகள் யுக பாரதி மற்றும் பாடியவர்கள் வாகு மசான் & ரம்யா நம்பீசன்
  5. தீ இன்பமே (அத்தியாயம்: நினைவோ ஒரு பறவை) – இளையராஜா, இசையில், யுக பாரதி பாடல் வரிகளை எழுத, கிறிஸ்டோபர் ஸ்டான்லி பாடியுள்ளார்.
  6. பேரன்பே (அத்தியாயம்: இமைகள்) – யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், யுக பாரதியின் பாடல் வரிகளில் ஷிவானி பன்னீர்செல்வம் & யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளனர்
  7. பாவி நெஞ்சே (அத்தியாயம்: நினைவோ ஒரு பறவை) – யுக பாரதியின் வரிகளில் இளையராஜா இசையமைத்து பாடியுள்ளார்
  8. உறவு (அத்தியாயம்: லாலகுண்டா பொம்மைகள்) – யுக பாரதி பாடல் வரிகளில் ஷான் ரோல்டன் இசையமைத்து பாடியுள்ளார்,பாடகி பத்மப்ரியா ராகவன் இணைந்து பாடியுள்ளார்
  1. ஆனால் (அத்தியாயம்: நினைவோ ஒரு பறவை) – இளையராஜா இசையமைத்து, யுக பாரதியின் பாடல் வரிகளில் அனன்யா பட் பாடியுள்ளார்
  2. கால விசை (அத்தியாயம்: நினைவோ ஒரு பறவை) – இளையராஜா இசையமைக்க, யுக பாரதியின் பாடல் வரிகளில் ஷிவானி மற்றும் பன்னீர்செல்வம் பாடியுள்ளனர்.
  3. சூரியன் தோன்றுது சாமத்திலே (அத்தியாயம்: நினைவோ ஒரு பறவை) – இளையராஜா இசையமைப்பில், யுக பாரதியின் வரிகளில் ப்ரியா மாலி பாடியுள்ளார்
  4. தென்றல் (அத்தியாயம்: மார்கழி) – இசையமைத்து, பாடல் வரிகள் எழுதி பாடியவர் இளையராஜா
  5. தேன் மழையோ (அத்தியாயம்: நினைவோ ஒரு பறவை) – இளையராஜா இசையமைப்பில், யுக பாரதியின் பாடல் வரிகளில் ஷிவானி பன்னீர்செல்வம் பாடியுள்ளார்.
  6. என்றும் எந்தன் (அத்தியாயம்: மார்கழி) – இளையராஜா இசை மற்றும் பாடல் வரிகள் பாடியவர் ப்ரியா மாலி
  7. காமத்துப் பால் (அத்தியாயம்: நினைவோ ஒரு பறவை) – பின்னணி இசை இளையராஜா
  8. கண்ணில் பாட்டு நெஞ்சைத் தொட்ட மின்னல் (அத்தியாயம்: நினைவோ ஒரு பறவை) – பின்னணி இசை இளையராஜா
  9. குட் பை (அத்தியாயம்: நினைவோ ஒரு பறவை) – பின்னணி இசை இளையராஜா
  10. எதிர்காலத்தின் நிச்சயமற்ற தன்மை (அத்தியாயம்: நினைவோ ஒரு பறவை) – பின்னணி இசை இளையராஜா

மாடர்ன் லவ் சென்னை தொடரின் இசை ஆல்பத்தை சோனி மியூசிக் சவுத் மூலம் வெளியிடப்படுவதோடு உலகளவில் முக்கிய ஸ்ட்ரீமிங் சேவைகளிலும் கிடைக்கிறது.