‘ப்ரோக்கன் ஸ்கிரிப்ட்’ விமர்சனம்!

Broken Script – Movie Review

CAST:

Rio Raj AS Thambi Durai, Joe Giovanni Singh AS Psycho, Jaineesh AS Amaran  (Police Officer), Gunalan AS Psycho2, NABIZAH JULLALUDIN AS DD, Moonila AS Maya

CREW:

Written & Directed by Joe Giovanni Singh, DOP – Saleem Bilal Jithesh, Music – Praveen Viswa Malik, Editor – Ram Manikandan, Art – Saravana Abhiraman, Produced by Streetlight Pictures, PRO – Nikil Murukan

 

‘ப்ரோக்கன் ஸ்கிரிப்ட்’ விமர்சனம்!

டாக்டர்களை தேடிப்பிடித்து மர்மமான முறையில் கொலை செய்யும் ஜோ ஜியோவானி சிங், ஒரு சைக்கோ கொலையாளி. இந்த மர்ம, சைக்கோ கொலையாளியை தேடி வருகிறார், போலீஸ் அதிகாரி, ஜெய்னீஷ். வீடியோ கேம் அடிக்ட், ரியோ ராஜ். இவரும், இவருடைய அக்கா நபிஷா ஜுலாலுதீனும், ரியலாக ஒரு கேம் விளையாட முடிவு செய்கின்றனர். அதன்படி பூட்டிகிடக்கும் வெவ்வேறு வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்க முயற்சிக்கின்றனர். அதில் ரியோ ராஜ், குணாளன் என்ற மற்றொரு சைக்கோவிடம் சிக்குகிறார்.

ஜோ ஜியோவானி சிங், குணாளன் இந்த இரண்டு சைக்கோ கொலைகாரர்களும் யார்? ஏன் கொலை செய்கிறார்கள். ரியோராஜின் நிலை என்ன ஆனது? என்பதே, ‘ப்ரோக்கன் ஸ்கிரிப்ட்’ படத்தின் மீதிக்கதை.

‘ப்ரோக்கன் ஸ்கிரிப்ட்’ படத்தின் கதை, திரைக்கதை, எழுதி இயக்கியிருக்கும் ஜோ ஜியோவானி சிங், சைக்கோ கொலையாளியாக மிரட்டவும், சில காட்சிகளில் எம்ஜிஆர் போல் ஆடிப்பாடி, ரசிகர்களை சிரிக்கவும் வைத்திருக்கிறார்.

இன்னொரு சைக்கோவாக நடித்திருக்கும் குணாளன், கதாபாத்திரத்திற்கேற்றபடி நடித்திருக்கிறார். ரியோ ராஜ், ஒரு சில காட்சிகளில் அதிகப்படியாக நடித்திருந்தாலும், கவனம் ஈர்க்கிறார். இவருடைய அக்காவாக நடித்திருக்கும் நபிஷா ஜுலாலுதீன், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஜெய்னீஷ் ஆகியோரும் ஓகேவான நடிப்பு!

ஒளிப்பதிவாளர் சலீம் பிலால் ஜித்தேஷ் சேஷிங் காட்சிகளில், சிங்கப்பூரின் சந்து பொந்துகளில் புகுந்து, படம் பிடித்திருக்கிறார்.

இயக்குநர் ஜோ ஜியோவானி சிங், குழப்பமான திரைக்கதையை தவிர்த்து, திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் ‘ப்ரோக்கன் ஸ்கிரிப்ட்’ ஒரு நல்ல ஸ்பூஃப் படமாக அமைந்திருக்கும்.