அறிவியல் புனைவு  – ‘3.6.9’ விமர்சனம்!

3.6.9 – Movie Review

Cast :

BHAGYARAJ (FATHER BENET CASTRO, PGS (CYRUS), BLACK PANDI (EDWARD), ANGAYAR KANNAN (WILLIAM), ALAM SHA (PETER)

NARESH (SUSAI), SOHAIL (ABRAHAM), RAJASHREE (ANITHA), SHAKTHIVEL (JOSEPH), SUBIKSHA (LIDIA), JAI (JOHN), KARTHIK (KARTHIK), PRAVEEN (ADRIAN), RISHI (SAMBA), BABLU (FELIX), SHREE (MIA)

Crew :

DIRECTOR – SHIVA MADHAV, DOP-MARISHWARAN MOHAN KUMAR, MUSIC DIRECTOR -KARTHIK HARSHA, ART DIRECTOR -SRIMAN BALAJI, EDITOR – R K SRINATH, LYRICIST- VIKY, MAKEUP-prince prem, SPECIAL EQUIPMENT TEAM –  RAJASEKHAR, Producer: PGS Kumar, Co-Producer: M.P.Anandh

Banner: PGS PRODUCTION & Friday Film Factory.

 

அறிவியல் புனைவு  – ‘3.6.9’ விமர்சனம்!

 

‘பிஜிஎஸ் புரொடக்சன்ஸ்’ சார்பில் தயாரிப்பாளர் பிஜிஎஸ் மற்றும் ‘ஃப்ரைடே பிலிம் பேக்டரி’ சார்பில் கேப்டன் எம் பி ஆனந்த் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 3.6.9.   இயக்குநர் சிவ மாதவ் இயக்கியுள்ளார். கே.பாக்யராஜ், படத்தின் தயாரிப்பாளர் பிஜிஎஸ், பிளாக் பாண்டி, அஜய் கண்ணன், சுகைல், சத்தி மகேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக இடைநிறுத்தாமல் 81 நிமிடங்கள், நடத்தி முடிக்கப்பட்டு, உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

24 கேமராக்கள், 150க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைள், 450 தொழில்நுட்ப கலைஞர்களை  கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்காக இப்படத்தின் தயாரிப்பாளரையும், இயக்குநனரையும் பாராட்டலாம்.

கிறிஸ்துவ பாதிரியார், கே.பாக்யராஜ். இவரது சர்ச்சுக்கு வரும் ஒரு பகுதி மக்கள், இவர் மீது குற்றம் சாட்டுவதோடு, அவரின் செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். ரு நாள், வழக்கமாக சர்ச்சுக்கு வரும் மக்கள் பிரார்த்தனையில் ஈடுபடுகின்றனர். பாதிரியார் கே.பாக்யராஜ் தலைமையில் ஜெபக்கூட்டம் நடைபெற ஆயத்தமாகிறது. இந்நிலையில், பிஜிஎஸ், நவீன துப்பாக்கிகள், வெடிகுண்டுகளுடன் அந்த சர்ச்சை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் அவர், தனது சகாக்களுடன் சேர்ந்து கே.பாக்யராஜை புளு பிரின்டை கேட்டு மிரட்டுகின்றனர். பாக்யராஜ் அதற்கு மறுக்க, சிலரை சுட்டுக்கொல்கின்றனர். எதனுடைய புளு பிரின்ட்டை அவர்கள் கேட்டு மிரட்டுகிறார்கள். பாக்யராஜ் அதை தர ஏன் மறுக்கிறார்? என்பதே அறிவியல் புனைவு கதையான ‘3.6.9’ படத்தின் மீதிக்கதை.

கிறிஸ்தவ பாதிரியாராக நடித்திருக்கும் கே.பாக்யராஜ், தனனால் முடிந்த அளவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். வில்லனாக, முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும் பிஜிஎஸ், பெரிதாக குறை சொல்லமுடியாத அளவிற்கு நடித்துள்ளார்.

இவர்களுடன் பிளாக் பாண்டி, அலம் ஷா, நரேஷ், சோஹைல், ராஜஸ்ரீ, சக்திவேல், சுபிக்‌ஷா, ஜெய், கார்த்திக், பிரவீன், ரிஷி, பாலு, ஸ்ரீ என அனைவரும் இயக்குநரின் விருப்பத்திற்கேற்ப நடித்துள்ளனர்.

பல குறைகள் இருந்தாலும், சிறிய பட்ஜெட்டில் ஒரு அறிவியல் புனைவுக் கதையை, 81 மணிநேரத்தில் எடுத்ததற்காக, தயாரிப்பாளர் பிஜிஎஸ், இயக்குநர் ஷிவ மாதவ் மற்றும் படக்குழுவினரின் உழைப்பை நிச்சயம் பாராட்ட வேண்டும்.