சித்தார்த் நடிப்பில் வெளியான ‘எனக்குள் ஒருவன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், பிரசாத் ராமர். நீண்ட காலத்திற்கு பிறகு, விடலை பருவத்தினரையும், அவர்களை சுற்றி நடக்கும் முக்கியமான பல நிகழ்வுகளை மைய்யப்படுத்தி, ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’, என்ற படத்தினை இயக்கியிருக்கிறார். இப்படத்தினை, ‘பூர்வா புரொடக்ஷன்ஸ்’ சார்பில், பிரபல பாடகரும், இசையமைப்பாளருமான பிரதீப் குமார், தயாரித்து இசையமைத்து பாடல்களை எழுதியிருக்கிறார்.
விடலையர்களின் சமூகத்தின் மீதான பார்வையும், சமூகத்தின் விடலையர்கள் மீதான பார்வையுமே இப்படத்தின் கதை! இளைஞர்களை குறி வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்திற்கு, ‘A’ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு இளைஞர்களை கவரும் ஏகப்பட்ட ஐட்டங்கள் கொட்டிக்கிடக்கிறதாம்! அதோடு படம் பார்த்த ஒவ்வொருவரிடமிருந்தும் பல கேள்விகள் எழுப்பப்படும் என்கிறார், படத்தின் இயக்குநர் பிரசாத் ராமர்.
‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ படம் வருகிற மார்ச் 8 ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில். இப்படம் குறித்து, இயக்குநர் பிரசாத் ராமர் கூறியதாவது,
‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ படத்தினில், ஆபாசமான காட்சிகள் இருக்கும். ஆனால், அருவருக்கத்தக்க காட்சிகள் இருக்காது. மேலும், இந்தக் காட்சிகளை மட்டுமே வைத்து ரசிகர்களை கவர முயற்சிக்கவில்லை! இது ஒரு ரோட் டிராவல் மூவி. இளைஞர்களின் ஜாலியான பார்வையில் ஒரு படம், இது அவர்களின் உலகம். இந்தப்படம் புத்தி சொல்லும் படமாகவும் இருக்காது! இந்த சமூகத்தில், இளைஞர்கள் மீதான பார்வை எப்படி இருக்கிறது? சமூகத்தை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள்? என்பதே கதையின் பிரதானம்.
‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ படத்தை வழக்கமான சினிமா பாணியில் எடுக்காமல் நிஜமாக இருக்க வேண்டும். என்று பிரயத்தனப்பட்டு எடுக்கப்பட்டிருக்கிறது. எல்லா படங்களிலும் வரும், அடிக்கடி பார்த்த லெக்கேஷன்கள் இதில் இருக்காது. உதாரணமாக மதுரையில் எடுக்கப்பட்டிருந்தாலும் மதுரையில் இருப்பவர்களுக்கு அது பரிச்சயமானதாகவும், மற்றவர்களுக்கு புதிதாகவும் இருக்கும். அதேபோல் தான், தஞ்சை, புதுக்கோட்டை, கும்பகோணம், மாயவரம் பகுதிகளையும் இப்படித்தான் காட்டியிருக்கிறோம்.’ என்றார்.
‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ படத்தினில், நாயகனாக நடித்திருக்கும் செந்தூர் பாண்டியனுக்கு முதல் படம். ஆனால், நாயகி ப்ரீத்தி கரன் பிரபலமான மாடல். இவர், ஏற்கனவே ‘கட்டுமரம்’என்ற படத்தில் நடித்திருப்பதோடு, ‘தங்கலான்’ மற்றும் ‘ட்ரைன்’ படங்களிலும் நடித்து வருகிறார். கிராமத்து பெண்ணாக நடிப்பதற்கு தனியாக பயிற்சி எடுத்த பின்னரே அவரால் அந்த கேரக்டரில் நடிக்க முடிந்தது என்கிறார்.
‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ படம் வருகிற மார்ச் 8 ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.