‘மழை பிடிக்காத மனிதன்’- விமர்சனம்!

இந்திய ராணுவப்படையின் திறமை வாய்ந்த ரகசிய ஏஜென்ட் விஜய் ஆண்டனி. இவர், கந்து வட்டிக்காரர் டாலி தனஞ்செயாவை திருத்துவது தான் கதை!

விஜய் ஆண்டனிக்கு மழை ஏன் பிடிக்கவில்லை. சரத்குமாருக்கும் அவருக்கும் என்ன உறவு. இந்திய ராணுவத்திடமிருந்து தலைமறைவா எதுக்கு இருக்காரு. அப்படிங்கறதெல்லாம் திரைக்கதை!

விஜய் ஆண்டனி, தன்னால் முடிந்தவரை ஆக்‌ஷனில் அதிரடியை காட்டியிருக்கிறார். ரசிக்கும்படியாகவே இருக்கிறது. மற்றபடி சொல்வதற்கு எதுவும் இல்லை!

ஒரு சில காட்சிகளில் மட்டுமே வருகிறார்கள் சரத்குமார், சத்யராஜ். இவர்கள் எதற்கு என்று தெரியவில்லை! இவர்களால் திரைக்கதையில் பெரிதாக எதுவும் இல்லை.

நாயகியாக மேகா ஆகாஷ்! டெம்ப்ளேட் ஆக்டிங். சோர்வடைய வைக்கிறார்.

கந்து வட்டி வில்லனாக டாலி தனன்ஜெயா, ஒரு பக்கம் இம்சை என்றால், போலீஸ் இன்ஸ்பெக்டராக  முரளி சர்மா, இன்னொரு இம்சை.

சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய், சுரேந்தர் தாக்கூர் ஆகியோர் ஓகே.

படத்தின் ஒரே ஒரு சூப்பர் விஷயம்னா அது விஜய் மில்டனின் ஒளிப்பதிவு மட்டுமே.

ஒளிப்பதிவு செய்து எழுதி இயக்கியிருக்கும் எஸ்.டி.விஜய் மில்டன், திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

விஜய் ஆண்டனியின் சலீம் படத்தின் தொடர்ச்சியாக இந்த படத்தின் கதையை ஆரம்பித்து, பிறகு வேறு ஒரு களத்தில் கதையை பயணிப்பதும் அதை சரியாக சொல்லாமல் விட்டிருப்பதும் படத்தின் பலவீனம்.

‘மழை பிடிக்காத மனிதன்’ – அவருக்கு பிடிச்சா என்ன.. பிடிக்கலைன்னா என்னா…!