‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ –  விமர்சனம்!

அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் எழுதி, இயக்கியுள்ள திரைப்படம், ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’. இயக்குநர் திருமலை தயாரித்துள்ள இப்படத்தில் அசோக் செல்வன், அவந்திகா மிஷ்ரா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, அழகம்பெருமாள், பகவதி பெருமாள், விஜய் வரதராஜ், படவா கோபி, பக்ஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

அஷோக் செல்வன், திரைப்பட இயக்குநராக முயற்சித்து வருகிறார். அவந்திகா நர்ஸாக பணிபுரிகிறார். ஒரு நாள் அஷோக் செல்வன், அவந்திகா மிஷ்ராவுடன் எதேச்சையாக ஆட்டோவில் பயணிக்கிறார். அந்த பயணத்தின் போது இருவருக்குள்ளும் காதல் ஏற்படுகிறது. அஷோக் செல்வனின் நெருங்கிய தோழி சரண்யா கர்ப்பமாகிறார்.  அந்த கர்ப்பத்தை கலைப்பதற்காக, அவந்திகா பணிபுரியும் ஆஸ்பத்திரியில், அஷோக் செல்வனை கணவனாக நடிக்க வைத்து அந்த கற்பத்தை கலைக்கிறார். இதை பார்க்கும் அந்த ஆஸ்பத்திரியில் பணிபுரியும் அவந்திகாவின் தோழி பானு, அவரிடம் அஷோக் செல்வனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டதாகவும், கருக்கலைப்பு செய்ததாகவும் சொல்லிவிடுகிறார். இதனால், அவந்திகாவிற்கும் அஷோக் செல்வனுக்கும் பிரிவு ஏற்படுகிறது. இதன் பிறகு என்ன நடந்த்து என்பது தான், ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ கதை.

அஷோக் செல்வன் வழக்கமான தனது துள்ளல் நடிப்பு மூலம், ரொமான்ஸ் நாயகனாக படம் முழுவதும் கலக்குகிறார். காதல் காட்சிகளில் மட்டுமின்றி காமெடிக்காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார்.

அஷோக் செல்வனுக்கு காதலியாக நடித்திருக்கும் அவந்திகா மிஸ்ரா, சிறப்பான தனது பங்களிப்பினை கொடுத்திருக்கிறார். காதல், கவர்ச்சி மற்றும் காமெடி ஆகியவற்றில் கவனம் பெறுகிறார்.

அஷோக் செல்வனின் அம்மாவாக நடித்திருக்கும் ஊர்வசி, அப்பாவாக நடித்திருக்கும் அழகம்பெருமாள், அக்காவின் கணவராக நடித்திருக்கும் படவா கோபி, டாக்டராக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் திரைக்கதை நகர்வுக்கு பெரிதும் பயண்பட்டிருப்பதோடு சிரிக்கவும் வைக்கிறார்கள்.

நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் பாடல்கள் ஓகே!

ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவினில் காட்சிகள் கலர் ஃபுல்லாளிருக்கிறது.

பல படங்களில் பார்த்த, பழைய காதல் கதை தான் என்றாலும், கலகலப்பான திரைக்கதை மூலம் சொல்லியிருப்பதால் ரசிக்க முடிகிறது. கிட்டத்தட்ட ஒரு  பொழுதுபோக்கு படமாக கொடுத்திருக்கிறார், இயக்குநர் பாலாஜி கேசவன்.

மொத்தத்தில், ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ பரவாயில்லை!