‘டெக்ஸாஸ் டைகர்’ திரைப்படத்தில் ஹிர்து ஹாரூன் நாயகனாக நடிக்கிறார்!

ஃபேமிலி படம் இயக்குநர் செல்வகுமார் திருமாறன் இயக்கத்தில், உருவாகும் அடுத்த படம், ‘டெக்ஸாஸ் டைகர்’. இதில், ‘கான்ஸ்’ திரைப்பட விழாவில் வெற்றி பெற்ற “All We Imagine As Light” படத்தின் நடிகர் ஹிர்து ஹாரூன், கதாநாயகனாக நடிக்கிறார்.

‘ஃபேமிலி படம்’ சமீபத்தில் வெளிவந்து,  உணர்வுப்பூர்வமான கமர்ஷியல் படைப்பாக, விமர்சகர்களிடமும், பார்வையாளர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப் படத்தை தயாரித்த “UK Squad” எனும் நிறுவனத்தின் கீழ் சுஜித், பாலாஜி குமார், பாரதி குமார் மற்றும் செல்வகுமார் திருமாறன் ஆகியோர் இணைந்து ‘டெக்சாஸ் டைகர்’ படத்தை தயாரிக்கின்றனர்.

‘டெக்ஸாஸ் டைகர்’ திரைப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களைப் பற்றிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாவிருக்கிறது.