‘மரகத நாணயம் 2’ படத்தில் இணையும் சத்யராஜ்!

'Maragadha Naanayam 2'; Director Promises More Comedy and Action Than Part 1

‘மரகத நாணயம் 2’ (Maragadha Naanayam 2) திரைப்படத்தின் சுவாரசியங்கள் மற்றும் பிரம்மாண்ட தயாரிப்புக் கூட்டணி குறித்து இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவன் பகிர்ந்து கொண்டதாவது..,

முதல் பாகத்தில் நடித்த நட்சத்திரங்கள் ஒவ்வொருவரும் இந்த புதிய கதையில் எப்படி இணைகிறார்கள், எந்தப் புள்ளியில் அனைவரும் ஒன்றுகூடுகிறார்கள் என்பது திரையரங்குகளில் படம் பார்க்கும்போது ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய சர்ப்ரைஸாக (Surprise) இருக்கும் என்று குறிப்பிட்டார். முதல் பாகத்தில் ரசிகர்கள் கொண்டாடிய அதே அசாத்திய நகைச்சுவை, சாகசம், மற்றும் விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகள் அனைத்தும் இந்த இரண்டாம் பாகத்திலும் அதே வேகத்துடன் இருக்கும் என்றும், அதைத் தாண்டி இன்னும் பல புதிய சுவாரசிய விஷயங்களும் படத்தில் ஒளிந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

படத்தின் டிரெய்லரில் (Trailer) கதையின் சிறிய முன்னோட்டம் மட்டுமே வெளியாகும் என்றும், தியேட்டர்களில் படம் பார்க்கும்போது இன்னும் பல ஆச்சரியங்கள் ரசிகர்களுக்காகக் காத்திருக்கின்றன என்றும் கூறினார். முதல் பாகத்தில் நடிகை நிக்கி கல்ராணியின் கதாபாத்திரம் மிகவும் சிறப்பானதாக அமைந்திருந்தது போல, இந்த இரண்டாம் பாகத்திலும் அவரது கதாபாத்திரம் மிகவும் வலுவானதாகவும், படத்திற்குப் பெரிய பலம் சேர்க்கும் வகையில் ஸ்பெஷலாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று பாராட்டினார்.

இத்திரைப்படத்தைப் பேஷன் ஸ்டுடியோஸ், ஆக்ஸெஸ் பிலிம் பேக்டரி, டங்கல் டிவி மற்றும் RDC மீடியா ஆகிய முன்னணி நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம், தேவ், கே.வி. துரை, மனிஷ் சிங்கள் மற்றும் துர்கம் சௌத்ரி ஆகியோர் இணைந்து கூட்டுத் தயாரிப்பாகப் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளனர். இப்படத்தில் ஆதி மற்றும் பிரியா பவானி சங்கர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்க, தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் சத்யராஜ் இப்பாகத்தில் ஒரு முக்கியப் பாத்திரத்தில் இணைந்துள்ளார். இவர்களுடன் நிக்கி கல்ராணி, முனிஷ்காந்த், ஆனந்தராஜ், டேனியல் ஆனி போப், அருண்ராஜா காமராஜ் மற்றும் முருகானந்தம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.