ஸ்போர்ட்ஸ் பாலிடிக்ஸை தோலுரித்துக் காட்டி, ரிலீஸான முதல் வாரத்திலேயே பாசிட்டிவ் விமர்சனங்களுடன் தியேட்டர்களில் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கிறது ‘அங்கீகாரம்’ திரைப்படம். படத்திற்கு கிடைத்துள்ள இந்தத் தரமான வரவேற்பைக் கொண்டாட படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அந்த மேடையில் நடந்த சில சுவாரசியம் இதோ:
“இந்தக் கதையை முதல்ல ஒரு டாப் ஹீரோகிட்டதான் சொன்னோம், ஆனா அது செட் ஆகல” என்று ஓப்பனாக உடைத்தார் இயக்குநர் தென்பாதியான். ஆனால், கதை மேல் இருந்த நம்பிக்கையால் விடாமல் துரத்தி, இன்று மக்களின் பாராட்டைப் பெற்று கெத்தாக நிற்கிறது படக்குழு.
ஆக்ஷன் கிங் பீட்டர் ஹெய்ன் முதலில் “இந்த ஹீரோவுக்கு நான் ஃபைட் மாஸ்டரா?” என்று யோசித்தாராம். ஆனால், கதையைக் கேட்ட அடுத்த செகண்ட் இம்ப்ரஸ் ஆகி உள்ளே வந்தார். ஜிப்ரானின் மிரட்டலான மியூசிக்கும் சேர்ந்து படத்தை வேற லெவலுக்கு கொண்டு போயிருக்கிறது!
ரியல் அத்லெட்டுகளின் வலிகளையும், போராட்டங்களையும் திரையில் துல்லியமாகக் கொண்டுவர, இயக்குநர் பல இடங்களுக்கு டிராவல் செய்து செம ரிசர்ச் பண்ணியிருக்கிறார் என்று தயாரிப்பாளர் அஜித் பாஸ்கர் பெருமிதத்தோடு பகிர்ந்து கொண்டார்.
“முகத்துக்கு நேராகவே ‘வேற ஹீரோவை போட்டிருக்கலாம்’ என்று தியேட்டர் ஓனர்கள் சொன்னார்கள். ஆனால், இன்று மக்கள் டிக்கெட் வாங்கி எனக்கு 1000% மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளனர்” என்று எமோஷனலாகப் பேசினார் தயாரிப்பாளரும் ஹீரோவுமான ராஜேஷ். மேலும், “இன்னும் 10 வருஷத்துல தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக நான் ஜெயித்துக் காட்டுவேன், என்னை நம்பும் தயாரிப்பாளர்களைக் கைவிட மாட்டேன்!” என்று செம மாஸாக சவால் விட்டுள்ளார்!