தமிழ் திரையுலகில் ஒரு முக்கிய திருப்பமாக, சுப்ரீம் ஸ்டார் ஆர். சரத்குமாரின் 171-வது திரைப்படத்தை (Sarathkumar 171) ஸ்ரீ ராஜலட்சுமி ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் பி. எல். தேனப்பனுடன் இணைந்து, பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இணை தயாரிப்பாக வழங்கவுள்ளது. இன்று நடிகர் சரத்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், பி. எல். தேனப்பனின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலிலும் வெளியிடப்பட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தயாரிப்பாளரான அனுப் மோகன் தலைமையில் இத்திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. பல சகாப்தங்களாகத் தமிழ் சினிமாவில் தரமான திரைப்படங்களைத் தயாரித்த அனுபவம் கொண்ட பி. எல். தேனப்பன் இப்படத்தில் இணைந்திருப்பது, இந்தத் தயாரிப்பிற்கு மேலும் வலுசேர்த்துள்ளது. இந்த மெகா கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியான உடனே, ரசிகர்களிடையேயும் ஒட்டுமொத்த திரைப்பட வர்த்தக வட்டாரங்களிலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.இப்படத்தின் இயக்குநர், மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் வரும் நாட்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.