‘ஜனநாயகன்’ – விமர்சனம்!

தேர்தல் நாள் பயத்தை உடைக்கும் புள்ளியில் படம் ஸ்டார்ட் ஆகுது. ஜெயில்ல கைதியா இருக்கும் விஜய், ஒரு இக்கட்டான சூழலில் ஜெயிலர் கௌதம் மேனனுக்கு ஹெல்ப் பண்ண, ரெண்டு பேருக்கும் நடுவுல செம நட்பு உருவாகுது. ஆனா, ஒரு ஆக்சிடென்ட்ல கௌதம் மேனன் இறந்துட, அவரோட பொண்ணு மமிதா பைஜூவை விஜய் தத்தெடுத்து வளர்க்கிறார். பிறந்ததுல இருந்தே பயந்த சுபாவம் கொண்ட மமிதாவை, ஆர்மிக்கு அனுப்ப விஜய் பிளான் பண்றார். அதே டைம்ல, ஆப்பிரிக்காவுல இருந்து இந்தியக் கடற்படையைத் தாக்கிட்டு உள்ளே நுழையுறான் இன்டர்நேஷனல் கார்ப்பரேட் வில்லன் பாபி தியோல். அவனோட சதித்திட்டத்துல மமிதா பைஜூ எதிர்பாராம மாட்டிக்க, தன் வளர்ப்பு மகளைக் காப்பாத்தவும், நாட்டோட பாதுகாப்பை உறுதி செய்யவும் விஜய் எடுக்கும் அதிரடி ஆக்‌ஷன் அவதாரம்தான் இந்த ‘ஜனநாயகன்’.

ஸ்கிரீன்ல விஜய் ஒன்-மேன் ஷோ காட்டியிருக்கார். அதிரடி மாஸ் ஹீரோ, பக்குவப்பட்ட வளர்ப்புத் தந்தை என இரண்டு ஷேட்ஸ்லயும் மிரட்டியிருக்கார். அவரோட பொலிட்டிக்கல் பஞ்ச் வசனங்களும், டான்ஸும் தியேட்டரை அதிர வைக்குது.

“பெண்களுக்குப் பயமிருக்கக் கூடாது, புலி மாதிரி வளர்க்கணும்” போன்ற வசனங்கள் மூலமா பெண்களுக்கான முக்கியத்துவத்தை வினோத் ஸ்ட்ராங்கா பதிவு பண்ணியிருக்கார்.

‘தளபதி கச்சேரி’ பாட்டுக்கு தியேட்டர்ல வேற லெவல் ஆட்டம்! அதேபோல ‘செல்ல மகளே’ சாங் தந்தை-மகள் பாசத்தை ரொம்ப உருக்கமா கடத்துது. பின்னணி இசையும் செம மாஸ்.

வில்லன் பாபி தியோலோட மிரட்டலான லுக் படத்துக்குப் பெரிய பலம். மமிதா பைஜூ அவங்களோட துறுதுறுப்பான நடிப்பால கவராங்க. பூஜா ஹெக்டே, கௌதம் மேனன் எல்லாரும் கச்சிதமான பங்களிப்பு.

இது தெலுங்கு மூவி ‘பகவந்த் கேசரி’யோட அஃபிஷியல் ரீமேக்ங்குறதால, அடுத்தடுத்து என்ன நடக்கப்போகுதுன்னு ஈஸியா கெஸ் பண்ண முடியுது.

ரோபோடிக் ஃபைட், ரிமோட் கண்ட்ரோல் வார்னு கிளைமாக்ஸ்ல ரொம்ப விஷயங்களை திணிச்சதால, சண்டைக் காட்சிகள் ரொம்ப நீண்டு சோர்வை தருது.

விஜய் படங்களுக்கே உரிய வழக்கமான லவ், லூட்டி, காமெடி டிராக் இதுல இல்லாதது கொஞ்சம் ஏமாற்றம்.

விஜய்யோட சினிமா கரியரோட கடைசிப் படம் என்பதால், இது ரசிகர்களுக்கு ஒரு எமோஷனல் தியேட்டர் திருவிழா! சில ஸ்கிரீன்பிளே தொய்வுகள் இருந்தாலும், விமன் சேஃப்டி மற்றும் சோஷியல் மெசேஜ் பேசும் ‘ஜனநாயகன்’ படத்தை ஒருமுறை தியேட்டர்ல பார்க்கலாம்.