மலையாள திரையுலகின் முன்னணி ஸ்டார் துல்கர் சல்மான் பிறந்தநாளை (Dulquer Salmaan Birthday) முன்னிட்டு, அவரது புதிய படமான ‘ஆகாசம்லோ ஒக தாரா’ (Aakasamlo Oka Thara – AOT) திரைப்படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடலான ‘மிட்டாய் மழை’ (Mittai Mazhai Song) அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
ஜி. வி. பிரகாஷ் குமார் (GV Prakash Kumar) இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த க்யூட் மெலடி பாடல், ரிலீசான சில நிமிடங்களிலேயே யூடியூப்பில் லைக்குகளைக் குவித்து ட்ரெண்டாகி வருகிறது.விண்வெளி கனவும் துல்கரின் காதலும்!இந்த ‘AOT’ திரைப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து சாத்விகா வீரவள்ளி (Satvika) மற்றும் ஸ்ருதிஹாசன் (Shruti Haasan) முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இயக்குநர் பவன் சடினேனி (Pavan Sadineni) இயக்கும் இத்திரைப்படம், ஒரு கிராமத்து பெண் விண்வெளி வீரராக (Astronaut) மாறும் கனவை மையமாகக் கொண்டது.நாயகி நட்சத்திரங்களைத் தொடத் துடிக்கும் லட்சியப் பயணத்திற்கு, நாயகன் துல்கர் சல்மான் கொடுக்கும் அமைதியான ஊக்கத்தையும், அவர்களின் தனித்துவமான காதலையும் இந்த ‘மிட்டாய் மழை’ பாடல் கவித்துவமாக விவரிக்கிறது.
பாலாஜி வேணுகோபால் வரிகளில் ரம்யா பெஹாரா குரல்!பிரபல பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால் (Balaji Venugopal) எழுதியுள்ள வரிகள், விடாமுயற்சி மற்றும் நம்பிக்கையைத் தரும் வகையில் அமைந்துள்ளன. பின்னணி பாடகி ரம்யா பெஹாரா (Ramya Behara) தனது அற்புதம்மான குரலால் இப்பாடலை பாடியுள்ளார். லைட் பாக்ஸ் மீடியா (Lightbox Media) தயாரிப்பில், ஸ்வப்னா சினிமா (Swapna Cinema) மற்றும் கீதா ஆர்ட்ஸ் (Geetha Arts) நிறுவனங்கள் இப்படத்தை வழங்குகின்றன.