பெண்கள் கல்லூரியில் ஒரே ஒரு ஆண் மாணவன்! கலர்ஃபுல் டிரெய்லருடன் அதிரடி கிளப்பும் ‘ஹைக்கூ’..
Actor Aegan Says the Film Will Change Men's Perspective Towards Women
விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில், இயக்குநர் யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில், ஏகன், ஸ்ரீதேவி, மற்றும் ஃபெமினா ஜார்ஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹைக்கூ’ (Haiku) திரைப்படம் வரும் அக்டோபர் 23ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக பி. சக்திவேலன் மூலம் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முக்கியப் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய நாயகன் ஏகன், இது ஒரு ஃபீல்குட் ரொமான்டிக் காமெடித் திரைப்படமாக இருந்தாலும், இதற்குள் மிக ஆழமானதொரு சமூகக் கருத்து மறைந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ‘ஹைக்கூ’ திரைப்படம் பெண்களைப் பற்றிய ஆண்களின் பொதுவான பார்வை சமுதாயத்தில் எப்படி மாற வேண்டும் என்பதையும், பெண்களை நாம் எதார்த்தமாக மதிப்பதன் அவசியத்தையும் அழுத்தமாக எடுத்துச் சொல்கிறது என்று ஏகன் விவரித்துள்ளார். ஆனால், இந்தப் படம் எந்த இடத்திலும் ரசிகர்களுக்குக் கருத்து போதிக்கும் பிரச்சாரப் படமாக இருக்காது என்றும், முழுக்க முழுக்க எண்டர்டெய்னிங் கதைக்களத்திற்குள் அந்த விழிப்புணர்வைக் இயக்குநர் இயல்பாக இணைத்துள்ளதால், திரையரங்கைவிட்டு வெளியே வரும் ரசிகர்களின் மனதில் இது நிச்சயம் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இத்திரைப்படத்தில் ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் ஆகியோருடன் அதிர்ச்சி அருண், சுப்ரமணிய சேது, அதியமான், மைம் கோபி, மற்றும் இந்துமதி மணிகண்டன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளனர். தொழில்நுட்ப ரீதியாக, சித்து குமார் இப்படத்திற்கு இசையமைக்க, ஹரிஹரன் ராம் கூடுதல் திரைக்கதையை எழுதியுள்ளார். பிரியேஷ் குருசாமியின் கலர்ஃபுல் ஒளிப்பதிவிற்கு, சக்தி பிரணீஷ்.பி படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். மேலும், பிரேம் கருந்தமலை இப்படத்தின் கலை இயக்கத்தை கவனித்துள்ளார்.