கார்த்திகேயன் சந்தானம் மற்றும் வர்திகா ஜெயின் இணைந்து தயாரிக்கும் ‘ஹைட் & சில்க்’ (Hide & Silk) திரைப்படத்தின் டைட்டில் புரோமோ, பட்டுப் புடவைகளின் பின்னணியில் நெசவாளரின் சிந்தனையை குரல் வழியே வெளிப்படுத்தியுள்ளது. “ஒவ்வொரு பட்டுப் புடவைக்கும் அதை அணிய வேண்டிய ஒரு பெண் ஏற்கனவே விதிக்கப்பட்டிருக்கிறாள்; அந்தப் புடவையின் உண்மையான அழகு அதை நெய்யும் செயல்முறையைத் தாண்டியும் இருக்கிறது” என்று சுவாரசியமாக இந்த புரோமோ வடிவமைக்கப்பட்டுள்ளது. நெசவாளர் புடவையை உருவாக்கிக் கொண்டிருக்கும்போதே, அந்தப் புடவை தனக்குரிய பெண்ணைத் தேர்ந்தெடுக்கும். என்ற முற்றிலும் மாறுபட்ட இரு வேறு உலகங்களைச் சேர்ந்தவர்களின் சந்திப்பாக இத்திரைப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.
‘3 BHK’ ஆல்பம் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ‘அனிமல்’ மற்றும் ரஜினியின் ‘பேட்ட’ உள்ளிட்ட பிரம்மாண்ட திரைப்படங்களில் பணியாற்றிய சுரேஷ் செல்வராஜன் இப்படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளராகப் (Production Designer) பணியாற்றுகிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவை மேற்கொள்ள, ஷஃபீக் முகமது அலி படத்தொகுப்புப் (Editing) பணிகளைக் கவனிக்கிறார். ஜஷுவா சண்டைக் காட்சிகளையும், பிரவீன் ராஜா ஆடை வடிவமைப்பையும், அமோல் போடகே கலை இயக்கத்தையும் மேற்கொள்கின்றனர். மாஸ்டர் ஷெரீப் நடன இயக்குநராகவும், மோகன் ராஜன் பாடலாசிரியராகவும் பணியாற்றுகின்றனர். படத்தின் ஒலி வடிவமைப்புப் பணிகளை சுரேன் ஜி மற்றும் அழகிய கூத்தன் மேற்கொள்ள, ஒலி கலவைப் (Sound Mixing) பணிகளைச் சுரேன் ஜி கவனிக்கிறார்.
சுஹாஸ், சஞ்சனா, தனிகெல்லா பரணி, நந்து, மற்றும் கருணாகரன் ஆகியோர் நடிக்கும் இந்த இருமொழித் திரைப்படம் விரைவில் உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இதன் முக்கிய விவரங்கள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.