‘லாஸ்ட் மேன் இன் டவர்’ –  இயக்குநர் பென் ரேகி நெகிழ்ச்சி!

Last Man in Tower Premiere! Director Ben Rekhi Appreciates the Spellbinding Performances of Manoj Bajpayee and Boman Irani!

ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகும் ‘லாஸ்ட் மேன் இன் டவர்’ (Last Man in Tower) திரைப்படத்தின் இயக்குநர் பென் ரேகி, இப்படத்தை உருவாக்கிய விதம் மற்றும் இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களான மனோஜ் பாஜ்பாய், போமன் இரானி ஆகியோருடன் பணியாற்றிய அனுபவம் குறித்துத் தனது நெகிழ்ச்சியான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இத்திரைப்படத்தை இயக்கிய அனுபவம் தனக்கு முழுமையான மனநிறைவை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தயாரிப்பாளர் ராணா தக்குபதி முதல் புகழ்பெற்ற திரைக்கதை எழுத்தாளர் சூனி தாராபோரேவாலா வரை, அரவிந்த் அடிகாவின் நாவலைத் தழுவி உருவாக்கப்பட்ட இப்படத்தின் ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரும் தங்களது ஆகச்சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர் என்று பெருமையுடன் தெரிவித்தார்.

குறிப்பாக, இந்தியத் திரையுலகின் இருபெரும் நடிப்பு ஜாம்பவான்களான மனோஜ் பாஜ்பாய் மற்றும் போமன் இரானி ஆகிய இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள இப்படத்தின் காட்சிகளைத் திரையில் பார்ப்பது ஒட்டுமொத்தக் குழுவிற்கும் ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது என்றார். சவாலான மற்றும் இக்கட்டான காலகட்டங்களில், ஒரு தனிமனிதன் தனது குடும்பத்தையும், தான் வாழும் சமூகத்தையும் எவ்வாறு ஒன்றாகப் பாதுகாப்பது என்பதைப் பற்றிய அவசரத் தேவையும் முக்கியத்துவமும் உள்ள ஒரு சமூகக் கதையாக இத்திரைப்படம்  உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

காலப்போக்கில் நகரமயமாக்கல் மற்றும் சமூக மாற்றங்கள் தீவிரமடைந்து வரும் தற்போதைய நவீனச் சூழலில், ‘லாஸ்ட் மேன் இன் டவர்’ திரைப்படத்தின் மையக்கருத்து இன்னும் அதிகப் பொருத்தமும் ஆழமும் கொண்டதாக மாறியுள்ளது என்றும் இயக்குநர் பென் ரேகி சுட்டிக்காட்டியுள்ளார். ராணா தக்குபாதியின் ஸ்பிரிட் மீடியா தயாரிப்பில், மனித உணர்வுகளின் சிக்கல்களைப் பேசும் இத்திரைப்படம் உலகளாவிய ஓடிடி ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.