‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

The HanuMan Universe Expands Panja Vaisshnav Tej to Lead 'HanuMan 2: The Rise of Vanaras'!

இந்தியத் திரையுலகில் மாபெரும் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்று நாடு முழுவதும் உள்ள ரசிகர்களின் கற்பனையைக் கவர்ந்த ‘ஹனு-மேன்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, அந்த ஃபேண்டஸி யுனிவர்ஸின் அடுத்த பிரம்மாண்ட அத்தியாயத்தை பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. திறமையான இளம் நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்புதிய திரைப்படத்திற்கு ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ (HanuMan 2: The Rise of Vanaras) எனப் பெயரிடப்பட்டுள்ளது. புராணங்கள், கற்பனை மற்றும் அசாதாரணமான சினிமா சாத்தியக்கூறுகளை அடிப்படையாகக் கொண்டு புதிய உலகத்திற்கான கதவுகளைத் திறக்கும் இப்படத்தை, ஃபேண்டஸி கதை சொல்லலில் தனித்துவம் மிக்க இயக்குநர் Vi. ஆனந்த் இயக்குகிறார். இளமைத் துடிப்பும் விரிவான கற்பனை வளமும் இணையும் இப்படத்தின் அறிவிப்புடன் வெளியிடப்பட்டுள்ள டைட்டில் போஸ்டர், தற்போது இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரம்மாண்டமான வானுலக வால் மற்றும் தெய்வீகப் பிரசன்னத்தால் சூழப்பட்டு, மேகங்களுக்கு மேலே ஒரு மனிதன் எழும் சக்திவாய்ந்த காட்சியைக் கொண்ட இந்த போஸ்டர், மாயாஜாலப் பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தைப் பிரதிபலிப்பதுடன் கதையின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது.

‘ஹனு-மேன்’ படத்தைத் தயாரித்த கே. நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோர் தங்களது பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் இப்படத்தையும் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றனர். ஏற்கெனவே சாய் துர்கா தேஜ் நடிக்கும் ‘எஸ்.ஒய்.ஜி.’ (SYG) மற்றும் கிச்சா சுதீப் நடிக்கும் ‘பி.ஆர்.பி.’ (BRB) ஆகிய பெரிய படங்களைத் தயாரித்து வரும் இவர்கள், பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத திரையரங்க அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன் இந்தப் புதிய படைப்பையும் உருவாக்குகின்றனர். சுவாரசியமான தலைப்பு, புதிய கதாநாயகன் மற்றும் பிரம்மாண்டமான படைப்புப் பார்வை ஆகியவற்றால் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ள இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன.