சேரனுக்கு உதவிய தனுஷ்!

இயக்குநர் சேரனின் இயக்கத்தில் உருவான ‘திருமணம்’என்ற படத்தின் மோஷன் போஸ்டரை தனுஷ் வெளியிட்டிருக்கிறார்.

மூன்று ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இயக்குநர் சேரன் மீண்டும் நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘திருமணம் சில திருத்தங்களுடன்’. இதில் சேரன்,சுகன்யா,உமாபதி ராமையா, கவிதா சுரேஷ்,எம் எஸ் பாஸ்கர்,மனோபாலா,ஜெயபிரகாஷ்,பால சரவணன்,சீமா ஜிநாயர், அனுபமா உள்ளிட்டபலர் நடிக்கிறார்கள். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, சித்தார்த் விபின் இசையமைக்கிறார்.இந்த படத்திற்குகதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சேரன். படத்தை பிரிநிஸ் என்ற புதிய பட நிறுவனம் மூலம் பிரேம்நாத் சிதம்பரம் தயாரிக்கிறார்.

படம் குறித்து சேரன் பேசுகையில்,‘இன்றைய சூழலில் திருமணம் என்றஒரு விசயத்திற்கு போதிய முக்கியத்துவம் தருவதில்லை. அதனை சடங்குக்குரிய விசயமாக மாற்றிவிட்டார்கள். இளையதலைமுறையினரிடத்தில் லிவிங்டூகெதர்என்ற போக்குபரவலான ஆதரவு பெற்று வரும் நிலையில் திருமணம் செய்து கொள்வதன் உண்மையான சமூக பின்னணியை சுவராசியமாக திரைக்கதையாக்கியிருக்கிறேன்.”என்றார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படத்தின் தொடக்க விழாவின் போதுமக்கள் செல்வன் விஜய சேதுபதி வெளியிட்டார்.

இதனையடுத்து படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டிருக்கிறார்.

இதனிடையே இயக்குநரும் நடிகருமான தம்பி ராமையாவின் இயக்கத்தில்,அவரது வாரிசான உமாபதி ராமையான நாயகனாக நடித்த ‘மணியார் குடும்பம்’ என்ற படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் சேரன், உமாபதியை வாழ்த்தி பேசுகையில்,‘மற்றவர்களைப் போல் நன்றாக இரு. கடுமையாக உழை.முன்னேறலாம் என்று வழக்கமாக வாழ்த்துவதை விடஉனக்கென்று ஒரு கதையை தயார் செய்கிறேன். அந்த கதை பிடித்தால் கால்ஷீட் கொடு.உனக்கு ஒரு கமர்சியல் ஹிட் படத்தை தருகிறேன்.”என்றார். அவரது வாக்குப்படியே திருமணம் படம் தயாராகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.