GV Prakash joins hands with director Ezhil!
இயக்குனர் எழில்,.தன்னுடைய படங்களில் காதலையும், காமெடியையும் சரியான விதத்தில் கலந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்துக்கொள்பவர் . தயாரிப்பாளர்கள் எழில் ஃபார்முலாவில் ஒரு படம் பண்ணுங்கன்னு மற்ற இயக்குனர்களிடம் சொல்ற அளவுக்கு இவர் இயக்கிய பல மீடியம் பட்ஜெட் படங்கள் வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் பல மொழிகளில் படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் ‘அபிஷேக் பிலிம்ஸ்’ பட நிறுவனத்தின் தயாரிப்பாளர், ரமேஷ் .பி. பிள்ளை எழில் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் படத்தை இன்று துவங்கி உள்ளார். இதன் துவக்க விழா ஒரு கோவிலில் எளிமையான முறையில் நடை பெற்றது. இப்படத்திற்கு C.சத்யா இசையமைத்துள்ளார். மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் பின்னர் அறிவிக்கப்பட்ட உள்ளது. வழக்கமான எழில் பார்முலா படியே இதுவும் காமெடி சப்ஜெக்ட்….மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
‘அபிஷேக் பிலிம்ஸ்’ பட நிறுவனம் தற்போது சித்தார்த் – ஜி.வி.பிரகாஷ் நடிக்க சசி இயக்கத்தில் ஒரு படத்தை மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்…