Karthi’s Thambi Movie Release Date
‘பாபாநாசம்’ படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா நடித்துள்ள படம் ‘தம்பி’.
சத்யராஜ், சீதா இருவரும் கார்த்தியின் அப்பா, அம்மாவாக நடிக்க, அக்காவாக நடித்துள்ளார் ஜோதிகா. ஃபேமிலி ட்ராமா த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
பல முன்னணி நிறுவனங்கள் போட்டியிட்ட நிலையில் ‘தம்பி’ படத்தின் தமிழ்நாட்டு உரிமையை, ஜப்பானை தலைமயிடமாக கொண்டு செயல்பட்டு வரும், ‘சோனி டிஜிட்டல் சினிமா’ ( SDC Pictures ) பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
சேரனின் நடிப்பில் ‘ராஜாவுக்கு செக்’, திரிஷாவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘கர்ஜனை’ ஆகிய படங்களின் வெளியிடும் உரிமையையும் இந்நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.
டிசம்பர் 20, அல்லது 27ல் ‘தம்பி’ படம் வெளியிட திட்டமிடபட்டுள்ளது.