பாலா சிங் காலமானார்

Bala Singh passes away – பாலா சிங் காலமானார்

பிரபல குணசித்திர நடிகர் பாலா சிங், இன்று அதிகாலை 2 மணியளவில் சென்னையில் காலாமானார். அவருக்கு வயது 67. அவரது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள களியக்காவிளை ஆகும்.

அவருக்கு தங்கலீலா என்ற மனைவியும், ஓசின், சிபின் என்ற மகளும், மகனும் உள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னர் மூச்சுத்தினறல் காரணமாக சென்னை, தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கபட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

பாலா சிங், நேஷ்னல் ஸ்கூல் ஆஃப் ட்ராமா- வில் நடிப்பு பயிற்சி பெற்றவர். 1983 ஆண்டு மேடை நாடகங்களிலும், மலையாளம்,, தமிழ் திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் சிறு சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.

நாசர் எழுதி, இயக்கி பலராலும் பாராட்டப்பட்ட ‘அவதாரம்’ படத்தில் ‘பாஸி’ என்ற டெரர் கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். புதுபேட்டை, விருமாண்டி, இந்தியன் அன்மையில் வெளியான ‘எ.ன்.ஜிகே’ வரை சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

பாலா சிங் தமிழ் திரையுலகில் தயாரிப்பு நிர்வாகியாகவும் பணிபுரிந்துள்ளது, குறிப்பிடதக்கது.