சில்லுக் கருப்பட்டி இயக்குனரின் அடுத்த படம் மின்மினி!

“சில்லுக் கருப்பட்டி” படத்தின் மூலம்  அனைவரின் கவனத்தை பெற்ற இயக்குனர் ஹலீதா ஷமீம் அடுத்து இயக்கி வரும் படம் ‘மின்மினி’

இது குறித்து அவர் கூறியதாவது..

நீங்கள் நேசிப்பரின் கனவுகளை நனவாக்க எந்த அளவுக்கு துணை நிற்கிறீர்கள்? அன்பு செலுத்துவதற்கும் வெறுப்பற்கும் மத்தியில் உள்ள மெலிதான கோடு என்ன?  என்னுள் இருக்கும் கேள்விகளுக்கு விடை காண நான் செய்யும் முயற்சியே ‘மின்மினி'”

“இளம் பருவத்தினர், தப்பு செய்தும் சிக்கிக்காதவரின் குற்றவுணர்வு, அன்பு மற்றும் வெறுப்பு இவற்றுக்கிடையே உள்ள மெலிதான வேறுபாடு, இளம்பருவத்தினரின் உணர்ச்சிகள் குறித்தெல்லாம் நிறைய கேள்விகள் எழுந்தாலும், இவற்றையெல்லாம் எளிமையாகவும் மென்மையாகவும் படத்தில் சொல்லியிருக்கிறேன்” என்கிறார் இயக்குநர் ஹலிதா ஷமீம்.

‘மின்மினி’ படத்தில் குழந்தை நட்சத்திரங்கள் கெளரவ் கலை, ப்ரவீண் கிஷோர் மற்றும் த்ரிஷ்யம் பாபநாசம் படங்களில் நடித்த எஸ்தர் அனில் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

‘சில்லுக்கருப்பட்டி’ படத்தில் ஒளிப்பதிவாளர்களாகப் பணியாற்றிய மனோஜ் பரமஹம்ஸா மற்றும் அபிநந்த ராமானுஜம் ஆகியோர் ‘மின்மினி’ படத்தைத் தயாரிக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.