அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் Dr.V.சாந்தா (93) காலமானார்.

சென்னை, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர், மருத்துவர். வி.சாந்தா (93), இன்று  உடல்நலக்குறைவால் காலமானார்.

மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டிருந்த மருத்துவர் வி. சாந்தா, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதயநோய் சம்பந்தமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவருக்கு அளித்த சிகிச்சை பலனளிக்கவில்லை. இதன் காரணமாக அவரது இன்று உயிர்பிரிந்தது.

பொது மக்களின் அஞ்சலிக்காக அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டில் மருத்துவர் சாந்தாவின் உடல்  வைக்கப்பட உள்ளது.

புற்றுநோய் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகள் மற்றும் சிகிச்சைக்காக உலகப் புகழ் பெற்றவர் மருத்துவர் வி.சாந்தா.

அவரது மருத்துவ சேவைக்காக மக்சேசே, பத்மவிபூஷண் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.