ட்ரெண்டிங்கில் சிலம்பரசனின் ‘பத்து தல’.

சிலம்பரசன், கெளதம்கார்த்திக் இணைந்து நடித்து வரும்  படம்,  ‘பத்து தல’. இந்தப்படத்தை இயக்கிவருபவர், ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா. இசையமைப்பவர் ஏ.ஆர், ரஹ்மான்.

‘பத்து தல’,  படத்தின் போஸ்டர்களை ஏ.ஆர்.ரஹ்மான் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். தற்போது அது அனைத்து சமூக வலைதளங்களிலும் அனைத்து ரசிகர்களாலும் பகிரப்பட்டு, ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

கன்னடத்தில் வெளியான ‘மப்டி’ரிமேக் தான் “பத்து தல”.