சேப்பாக்கம் தொகுதியில் சுழன்றடித்து மக்கள் சேவையாற்றிய உதயநிதி ஸ்டாலின், தற்போது சினிமா படப்பிடிப்பில் தீவிரம் காட்டி வருகிறார். நடிகை நிதி அகர்வாலுடன் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடிக்க, இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கிவரும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு அன்மையில் பாண்டிச்சேரியில் நிறைவடைந்துள்ளது.
கடந்த ஆண்டில் துவங்கப்பட்ட இந்தப்படம் சட்டமன்ற தேர்தல், கொரொனா காரணமாக தள்ளிப்போனது. இன்னும் சில காட்சிகள் எடுத்தால் படம் ரிலீஸுக்கு ரெடியாகிவிடுமாம்.
உதயநிதி ஸ்டாலின் அடுத்தாக அருண்ராஜா காமராஜ் இயக்கவிருக்கும் ‘ஆர்டிகிள் 15’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஆயத்தமாகிவருகிறார். அதன் பின்னர் இயக்குனர் மாரி செல்வராஜ் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
அதனையடுத்து சினிமாவில் இருந்து சற்று விலகி, அரசியலில் தீவிரம் காட்டவிருக்கிறாராம். தவிர்க்கமுடியாத கதையம்சம் கொண்ட படங்கள் என்றால், பரிசீலனை செய்வார். என்றும் கூறப்படுகிறது.