டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகும் ‘அன்னபெல் விஜய்சேதுபதி’!

விஜய்சேதுபதி, டாப்ஸி, யோகிபாபு,ராதிகா சரத்குமார் ஆகியோர் நடித்துள்ள ஹாரர், காமெடி படத்தினை  இயக்குனரும், நடிகருமான சுந்தரராஜனின் மகன் தீபக் சுந்தரராஜன் இயக்கியுள்ளார்.

‘அன்னபெல் சுப்பிரமணியன்’ என முதலில் பெயரிடப்பட்டிருந்த இந்தப்படத்திற்கு தற்போது ‘அன்னபெல் விஜய்சேதுபதி’ என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஜெய்பூரிலும், சென்னையிலும் நிகழும் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதையம்சம் கொண்ட ‘அன்னபெல் விஜய்சேதுபதி’ படத்தில், விஜய்சேதுபதியும், டாப்ஸியும் இரட்டை வேடங்களில் நடிக்கின்றனர்.

பாஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள ‘அன்னபெல் விஜய்சேதுபதி’ படம் டிஸ்னி  ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.