திருஞானசம்பந்தரால்1500 ஆண்டுகளுக்கு முன்னர் தோற்றுவிக்கப்பட்ட மதுரை ஆதீனம், தமிழகத்தின் மிக தொன்மையான சைவ சமய திருமடங்களில் ஒன்று. இந்த மடத்தில் அருணகிரிநாதர் ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமி 292 வது பீடாதிபதியாக இருந்து வருகிறார்.
கடந்த 9ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக அருணகிரிநாதர் ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமி மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சுவாசக் கோளாறு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதனை தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று இரவு 9 மணி அளவில் அருணகிரிநாதர் ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமி காலமானார். அவருக்கு வயது 77.
ஆதீனத்தின் முறைப்படி அவருடைய இறுதி சடங்கு நாளை மதுரையில் நடைபெறுகிறது.