தமிழக அரசு பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்த 2021 – 22 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள்…

 

* உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட 4,57,645 மனுக்களில் 2,29,216 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது.

* வரிமுறையை சீர்செய்வதற்காக சட்ட, பொருளாதார வல்லுநர்களை கெண்ட குழு அமைக்கப்படும்.

* அனைத்து குடும்பங்களின் பொருளாதார நிலையை அறிவதற்கான தர்வுகளை திரட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

* அனைத்து பொதுசேவை துறைகளிலும் தமின்னணு அளவீட்டு முறை அறிமுகப்படுத்தப்படும்.

* பொது வினியோக திட்டத்தில் மின்னணு கொள்முதல் முறை அமல்படுத்தப்படும்

* அனைத்து துறைகளின் நடைமுறைகளும் முழுமையாக கணினிமயமாக்கப்படும்

* 2.05 லட்சம் ஹெக்டேருக்கு அதிகமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது

* பொது நிலங்களை முறையாக பயன்படுத்த ‛அரசு நில மேலாண்மை அமைப்பு’ அமைக்கப்படும்

* அரசு நிதி சார்ந்த வழக்குகளை கையாள ‛வழக்கு இடர் மேலாண்மை அமைப்பு’ உருவாக்கப்படும்.

* அனைத்து அரசு நிதியும் கருவூலத்தில் வைக்கப்படும்

* 1921ம் ஆண்டு முதலான சட்டசபை ஆவணங்கள் கணினி மயமாக்கப்படும்.

* அரசின் உட்தணிக்கை அமைப்பு முறையில் அடிப்படை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்

* ஒவ்வொரு ஆண்டும் ‛ஜூன் 3ம் தேதி’ கலைஞர் கருணாநிதி செம்மொழித்தமிழ் விருதும், ரூ.10 லட்சம் வழங்கப்படும்.

* செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்டத்திகீழ் தமிழ்ப் படைப்புகள் மொழிப்பெயர்க்கப்படும்.

* தொல்லியல் துறைக்கு ரூ.29.43 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* தமிழகத்தில் நடைபெறும் தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் மேற்கொள்ள ரூ..5 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* கீழடியில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.