’தேவரைப் போல யாரும் பிறக்கவுமில்லை! பிறக்கப் போறதுமில்லை!’ – சினேகன்

‘ஜல்லிக்கட்டு மூவிஸ்’ பட நிறுவனம் சார்பில் எம்.எம்,பாபு, எஸ்.எஸ்.ஆர்.சத்யா, ஜி.ஜெயந்தினி தயாரிக்கும் படம், ‘தேசியத் தலைவர்’. இதில் ‘பசும்பொன்’ முத்துராமலிங்க தேவராக ஜே.எம் பஷீர் நடிக்கிறார்.

நீதிபதியாக பாரதிராஜாவும், முத்துராமலிங்கத் தேவருக்கு வாதாடும் வக்கீலாக  ராதாரவியும் நடிக்கின்றனர். ‘ஊமை விழிகள்’ உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கிய  ஆர்.அரவிந்தராஜ் இயக்குகிறார். ‘மேஸ்டரோ’ இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார்.

 

படம் குறித்து இயக்குனர் ஆர்.அரவிந்தராஜ் பேசியதாவது…

பெரும்பாலான இன்றைய இளைஞர்கள், தேவர்.. ‘பெயர் கேள்வி பட்டிருக்கிறேன். நந்தனத்தில் சிலை இருக்கிறது’. என்கிறார்கள். ஆனால் இந்திய விடுதலைப் போராட்டத்தில் அவருடைய பங்கு மிகப்பெரிய ஒன்று.

‘தேசியமும், தெய்வீகமும் எனது இரண்டு கண்கள்’ என நேர்மையான, உண்மையான, தூய்மையான அரசியல்வாதியாக இருந்தவர். அவருடைய வாழ்க்கையில் எந்தவொரு இடத்திலும் தன்னுடைய கொள்கையையோ, நேர்மையையோ கைவிட்டதில்லை. அவர் வாழ்க்கை வரலாற்றில் மறைக்கப்பட்ட, மறந்து போன பல விஷயங்கள் படமாக்கப்பட்டுள்ளது.

எனக்கு தேவரய்யா பற்றி படமாகவோ, டி வி சீரியலாகவோ எடுக்க எனக்கு எண்ணம் இருந்தது.ஆனால் அது படமாக எடுக்கப்பட்டு வருவது, எனக்கு கிடைத்த பொக்கிஷம். என்றார்.

முத்துராமலிங்க தேவரின் 114 ஆவது ஜெயந்தி விழா, மற்றும் 59 ஆவது குரு பூஜை விழாவினை முன்னிட்டு, ‘தேசியத் தலைவர்’ படத்தில் இடம்பெறும்  இசைஞானி இசையில் உருவான ’தேவரை போல யாரும் பிறக்கவுமில்லை பிறக்க போறதுமில்லை’ என்ற சினேகன் எழுதிய  பாடல் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது.