மதுரை ஆதீனத்தின் 292 வது பீடாதிபதி கவலைக்கிடம்!

திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட மதுரை ஆதீனம் தமிழகத்தின் மிக தொன்மையான சைவ சமய திருமடங்களில் ஒன்று. இந்த மடத்தில் அருணகிரிநாதர் ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமி 292 வது பீடாதிபதியாக இருந்து வருகிறார்.

கடந்த 9ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக அருணகிரிநாதர் ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமி மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சுவாசக் கோளாறு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.

தொடர்ந்து சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.