பிரபல டப்பிங் கலைஞரும், நடிகருமான காளிதாஸ் காலமானார்!

தமிழ் திரையுலகில் முன்னணி டப்பிங் கலைஞரும் நடிகருமான காளிதாஸ் இன்று காலமானார். தமிழ் பல திரைப்படங்களில் நடித்த வில்லன்களுக்கு டப்பிங் குரல் கொடுத்தவர். இவர் சுமார் 3000 படங்களுக்கும் மேலாக டப்பிங் கொடுத்துள்ளார்.

காளிதாஸ் சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவருடைய உடல்நிலை மோசமடைந்ததன் காரணமாக சிகிச்சை பலனின்றி இன்று ஆகஸ்ட் 12 மாலை காலமானார்.

நாளை ஆகஸ்ட் 13 ஆம் தேதி அவருடைய உடல் தகனம் செய்யப்படவுள்ளது.