கவர்ச்சியின் உச்சமான ‘சர்வைவர்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் அர்ஜூன்!

சர்வதேச அளவில் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவான  ‘சர்வைவர்’ நிகழ்ச்சியை, ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சி விரைவில் துவங்கவுள்ளது. மக்கள் நடமாட்டமில்லாத ஒரு தனித்தீவில் போட்டியாளர்கள் தனித்து விடப்படுவார்கள்.

போட்டியாளர்களே தங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் அந்தத்தீவில் கிடைப்பதை வைத்து பயன்படுத்தி கொள்ள வேண்டும். இதன் மூலம் அந்தத்தீவில் கடைசிவரை யார் இருக்கிறார்களோ, அவர்தான் வெற்றி பெற்றவர்.வெற்றி பெறுபவருக்கு 1 கோடி வழங்கப்படும்.

இதற்கான போட்டியாளர்கள் தேர்வு நடந்து  முடிந்துவிட்டன. கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் இருக்கும்படியாக கவர்ச்சி நடிகைகள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமாகவுள்ளார்  நடிகர் அர்ஜுன்.  இது தொடர்பாக அர்ஜுன் கூறியிருப்பதாவது:

‘உலகம் முழுவதும் பிரபலமான  இந்த ரியாலிட்டி ஷோவில் பங்கெடுப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த மூன்று மாத பயணத்தில், போட்டியாளர்கள் சந்திக்கும் அதே சவால்களை பார்வையாளர்கள் உணரும்படியாக இருக்கும்.

கடுமையான சவால்களை எதிர்கொள்ளும் போட்டியாளர்களின் ஆற்றல், தைரியம், விடாமுயற்சி, நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை  என அனைத்துக்கும் சவால் விடும் ஒரு அசல் போட்டியாக  இருக்கும்’ என நடிகர் அர்ஜூன் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் மிகவும் புகழ்பெற்ற ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் போட்டியாக இந்த நிகழ்ச்சியை ஜீ தமிழ் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் கவர்ச்சி நடிகைகள் சஞ்சனா சிங், ஶ்ரீரெட்டி, வனிதா விஜயகுமார், விஜே.பார்வதி, ஷாலு ஷம்மு ஆகியோருடன் இந்த்ரஜா ஷங்கர், வித்யுலேகா, விஜயலக்‌ஷ்மி அகத்தியன், நடிகர்கள் நந்தா, ஜான்விஜய் உள்ளிட்டோர் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.