‘கூகுள் குட்டப்பா’ வை பார்க்க ஆவலாக இருக்கிறேன் – நடிகர் சூர்யா!

பிக்பாஸ் வெளிச்சத்தில் பிரபலமான பிக்பாஸ் தர்ஷன்- லொஸ்லியா இணைந்து நடித்திருக்க,  கே. எஸ். ரவிக்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘கூகுள் குட்டப்பா.’

யோகி பாபு, பூவையர், மனோபாலா, மாரிமுத்து, ‘பிளாக்’ பாண்டி, ‘பிராங்க் ஸ்டார்’ ராகுல், நடிகை பவித்ரா லோகேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் ‘கூகுள் குட்டப்பா’ படத்தினை ஆர்.கே. செல்லுலாயிட்ஸ்  சார்பில் கே.எஸ்.ரவிகுமார் தயாரித்துள்ளார்.

‘கூகுள் குட்டப்பா’  படத்தின் திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநர்களாக சபரிகிரீசன் மற்றும் குரு சரவணன் என்ற இரட்டை இயக்குனர்கள் அறிமுகமாகிறார்கள். இவர்கள் இருவரும் இயக்குநர் கே. எஸ். ரவிக்குமாரிடம் உதவியாளர்களாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள்.

இவர்களில் சபரிகிரீசன் இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரின் அண்ணன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தைப் பற்றி இரட்டை இயக்குனர்கள் பேசுகையில்,’மலையாளத்தில் ‘ஆன்ட்ராய்ட் குஞ்சப்பன்’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தை, தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் யோகி பாபுவின் காமெடியுடன், கிராபிக்ஸ் காட்சிகளுடன் சேர்த்து திரைக்கதையை சுவராசியப்படுத்தியிருக்கிறோம்.

ஆறு வயது முதல் அறுபது வயது வரையுள்ள அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் ஃபேமிலி என்டர்டெய்னராக ‘கூகுள் குட்டப்பா’ உருவாகியுள்ளது.  இப்படத்தில் ரோபோ ஒன்று முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறது. அது செய்யும் குறும்புத்தனமான சேட்டைகள் குழந்தைகளையும், இளைஞர்களையும் உற்சாகப்படுத்தும்.’ என்றனர்.

‘கூகுள் குட்டப்பா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை  வெளியிட்ட, நடிகர் சூர்யா இந்தப்படத்தை பார்க்க தான் மிகவும் ஆர்வமாக இருப்பதாக கே.எஸ்.ரவிகுமாரிடம் தெரிவித்தாராம்.