‘பிசாசு 2’ பயமுறுத்தவில்லை என்றாலும் ஆண்ட்ரியா பார்த்துக்கொள்வார்!?

தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகிவரும் ‘பிசாசு 2’ படத்தினை  ‘ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட்’ சார்பாக தயாரிப்பாளர் T.முருகானந்தம் தயாரிக்க, மிஷ்கின் இயக்குகிறார்.

‘பிசாசு 2’ படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விஜய் சேதுபதி கவுரவ தோற்றத்தில் நடிக்கிறார்.

மிஷ்கின் இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம்,’ பிசாசு’. இந்தப்படத்தில் எடுக்காமல் விடப்பட்ட காட்சிகளையும், படத்தின் வெற்றியையும் கொண்டு ‘பிசாசு 2′  உருவானதாக கூறப்படுகிறது.

ஆண்ட்ரியா இந்தப்படத்தில் ஒரு காட்சியில் நிர்வானமாக நடிக்கிறார் என்ற செய்தி வந்தவுடன் ரசிகர்களிடம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஒரு பெண் குளிக்கும் தொட்டியில் தனது முழங்கால் தெரியும் படியும், கை விரலில் சிகரட் பிடித்தபடி இருக்கும்’பிசாசு 2’  போஸ்டரை இயக்குனர் வெற்றிமாறன் தனது சமூக வலைதளம் மூலமாக வெளியிட்டுள்ளார்.

ரசிகர்கள் அந்த போஸ்டரை டேக் செய்து, ‘ஆண்ட்ரியா நிர்வாண போஸ்டரை, எப்போ மிஷ்கின் ரிலீஸ் பண்ணுவீங்க?’ என சமூக வலதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

‘பிசாசு 2’ பயமுறுத்தவில்லை என்றாலும் ஆண்ட்ரியா பார்த்துக்கொள்வார்!?