யூனஸ், எல்வின் ஜூலியட், அகில் பிரபாகரன், ஷாஜி, ஷீரா, மேகா மாலு, மனோகரன், வில்லனாக தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமி உள்ளிட்டவர்களின் நடிப்பினில் வெளியாகியிருக்கும் படம், ஐமா. தமிழ் எக்ஸாடிக் பிலிம்ஸ் (Tamil Exotic Films) நிறுவனம் சார்பில், சண்முகம் ராமசாமி தயாரித்துள்ளார். ராகுல் ஆர்.கிருஷ்ணா கதை எழுதி இயக்கியிருக்கிறார்.
ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாத நயகன் யூனஸ், நாயகி எல்வின் ஜூலியட் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்கின்றனர். அப்போது இருவரையும் மர்ம நபர் ஒருவர் கடத்தி, அவர்களின் கை, கால்களை கட்டி, ஒரு பாழடைந்த வீட்டில் அடைத்து வைக்கிறார். இருவரும் அவர்களாகவே தங்களை விடிவித்து கொள்கின்றனர். அப்போது ஒரு மர்மக்குரல் ஒலிக்கின்றது, ‘உங்கள் உடலில் விஷம் செலுத்தப்பட்டு உள்ளது. உங்களை காப்பாற்றிக்கொள்ள சில குறிப்புகள் இங்கே இருக்கிறது. அதை பின் பற்றி முடிந்தால் தப்பித்து கொள்ளுங்கள்’. என்று சொல்கிறது. அவர்களை கடத்தியது யார்? ஏன்? என்பது தான், ‘ஐமா’.
நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் யூனஸ், தளபதி விஜய்யை பிரதி எடுத்தது போல் இருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை எல்வின் ஜூலியட், நடிப்பிலும் குறை சொல்ல முடியாது.
டாக்டர் கதாபாத்திரத்தில், வில்லனாக நடித்திருக்கும் ‘ஐமா’ படத்தின் தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமி, அறிமுக நடிகரைப் போல் இல்லாமல் அவரும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.
இவர்களைப் போலவே நாயகியின் அண்ணாக நடித்திருப்பவர், நாயகனின் அம்மாவாக நடித்திருப்பவர் என, அனைவருமே சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் விஷ்ணு கண்ணனின் ஒளிப்பதிவும், கே.ஆர்.ராகுலின் இசையும் ஓகே.
இயக்குநர் ராகுல் ஆர்.கிருஷ்ணா, புதுமுகங்களை வைத்துக்கொண்டு சுவாரஸ்யமான, டிவிஸ்டுகளுடன், படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார்.
‘ஐமா’ சஸ்பென்ஸ் க்ரைம் படம் பார்ப்பவர்களுக்கு பிடிக்கும்!