கொரோனா பிடியில் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’- படப்பிடிப்பு பாதியில் நிறுத்தம்.

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு  கொரோனா காரணமாக கடந்த 8 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் 15 ஆம் தேதி முதல் ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமானது.

ரஜினிகாந்துடன், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்து வந்தனர்.. ஆந்திர மாநில சுகாதாரத்துறை நடத்திய கொரோனா பரிசோதனையில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட 8 பேருக்கு கொரோனா தொற்று நோய் உறுதியானதை அடுத்து உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்ட அனைவரும் தனிமை படுத்தி கொள்ள பரிந்துரைக்கப் பட்டுள்ளனர்.

டிசம்பர் 29-ம் தேதியுடன் முடிவடையும் நிலையிலிருந்த அண்ணாத்த படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மீண்டும் காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளது.