சென்னை, வேளச்சேரி நேதாஜி சாலையில் இயங்கிவரும் பள்ளி செயின்ட் பிரிட்டோ அகாடமி. கொரோனா காரணமாக எட்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, பள்ளி நிர்வாகம் சிறப்பு கட்டணங்களை விதித்துள்ளது, மேலும் கட்டணம் கட்டாத மாணவர்களை ஆன்-லைன் வகுப்பிலிருந்து நீக்கியுள்ளது.
சிறப்பு கட்டணம் வசூலுக்கான சரியான காரணத்தை கூறாத நிர்வாகத்தை கண்டித்து அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி முன் திரண்டு தங்களது கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மேலும் எந்த அசம்பாவிதமும் நடக்காமல் வேளச்சேரி போலீஸார் பெற்றோர்களிடம் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுப்படுத்தினர்.
பிரிட்டோ அகாடமி பள்ளி, நடிகர் விஜய்யின் உறவினரும், பிரம்மாண்டமான செலவில் உருவான ‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோவிற்கு சொந்தமானது என்பது குறிப்பிடதக்கது.