Star cast – Aryan Shyam, Aadhya Prasad, Lima s Babu, Rajkumar, Kishore Rajkumar, Imman
Annachi.
Story and Screenplay: Aryan Shyam, Vivy Kathiresan
Banner : Green Magic Entertainment , Direction – Vivy Kathiresan
Music – N.S.Robert Sargunam, Dop – Satish Kathirvel
ஆர்யன் ஷாம், ஒரு திரைப்பட இயக்குநர். இவர் தனது குழுவினருடன் ஸ்டோரி டிஸ்கஷனுக்காக ஒரு பங்களாவில் தங்குகிறார். அப்போது சில அமானுஷ்யமான விஷயங்கள் நடக்கிறது. தொடர்ந்து நடக்கும் அந்த விஷயங்கள் அவர்களை அச்சுறுத்துகிறது. அதனால், குழுவினர் அங்கிருந்து வெளியேற முடிவு செய்கின்றனர். ஆனால், அது முடியாமல் போகிறது. அதோடு, முகமூடி அணிந்த ஒரு உருவம் அவர்களை கொல்லத்துடிக்கிறது. இதன் பிறகு என்ன நடந்தது? என்பதை திகில் கலந்த திரைக்கதையில் சொல்வது தான் அந்த நாள் படம்.
நாயகன் ஆர்யன் ஷாமிற்கு இது முதல் படம். ஆனால், எந்த வித தயக்கமும், தடுமாற்றமுமின்றி நடித்திருக்கிறார். வெவ்வேறு குணாதிசயங்களை வெளிப்படுத்தி மிடட்டியிருக்கிறார். அவரது தோற்றமும் அவருக்கு கை கொடுத்துள்ளது, அடிதடி படங்களுக்கும், ஆடிப்பாடி நடிக்கவும் தகுந்த தோற்றம்.
நாயகியாக நடித்திருக்கிறார், ஆத்யா பிரசாத். குறை சொல்ல முடியாத நடிப்பு. நாயகன் ஆர்யன் ஷாமின் உதவியாளர்களாக லிமா எஸ் பாபு, கிஷோர் ராஜ்குமார், ராஜ்குமார், இமான் அண்ணாச்சி திரைக்கதை நகர்வுக்கு பயன்பட்டிருப்பதோடு குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.
ஒரு பெண்ணை நரபலி கொடுக்கும் ஆரம்பக்காட்சியிலேயே ஒளிப்பதிவின் சிறப்பு தெரிகிறது! குறிப்பாக இரவில் நடக்கும் காட்சியில், ஒளிப்பதிவாளர் சதிஷ் கதிர்வேலின் ஒளிப்பதிவு திகிலூட்டுகிறது. திரைக்கதைக்கு பெரிதும் உதவியிருப்பது ஒளிப்பதிவும், இசையும் தான். இசையமைப்பாளர் என்.எஸ்.ராபர்ட் சற்குணத்தின் பின்னணி இசை, திரைக்கதைக்கு ஏற்றபடி அமைந்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் ஜே.எஸ்.காஸ்ட்ரோவின் படத்தொக்குப்பு இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம்.
நாயகன் ஆர்யன் ஷாம் மற்றும் இயக்குநர் வீவீ கதிரேசன் ஆகியோர் எழுதியிருக்கும் கதையில் சுவாரசியம் இருந்தாலும், காட்சிகளாக தொகுக்கும் போது இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக தொகுத்திருக்கலாம். இருந்தாலும், படத்தின் ஆரம்பத்தவுடனேயே கதைக்குள் சென்றுவிடுவதால், நரபலி அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை எதிர்பார்க்க வைத்ததில் இருவருமே வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஆர்யன் ஷாம் டிவிஸ்ட்! யாரும் எதிர்பார்க்காதது.
‘அந்த நாள்’ – திகில் பிரியர்களுக்கானது!