அப்புக்குட்டி நாயகனாக நடித்த ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ திரைப்படம் ரிலீஸூக்கு ரெடி!

‘பிளான் த்ரீ ஸ்டுடியோஸ்’ பிரைவேட் லிமிடெட் சார்பில், ரோஜி மேத்யூ, ராஜு சந்திரா இருவரும் தயாரிக்க, மாதன்ஸ் குழுமம்   இணைந்து தயாரித்துள்ள திரைப்படம், பிறந்த நாள் வாழ்த்துக்கள். இதில் அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடித்திருக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா அனில் நடித்துள்ளார். இவர், இப்படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகம் ஆகிறார். இவர்களோடு, ஸ்ரீஜா ரவி மற்றும் ரோஜா மேத்யூ முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மலையாளத்தில் விமர்சன ரீதியாகப் பலரின் பாராட்டுகளை பெற்ற, ‘ஜிம்மி இ வீட்டின்ட ஐஸ்வர்யம்’,  ‘ஐ ஆம் ஏ பாதர்’  ஆகிய படங்களை, இயக்கிய ராஜு சந்திரா, தனது மூன்றாவது படமாக ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ தமிழ்ப் படத்தை கதை எழுதி, ஒளிப்பதிவு செய்து,  இயக்கியுள்ளார்!

கிராமத்து வாழ்க்கை எதார்த்தத்தை, காதலுடன் காமெடி கலந்து, ஜனரஞ்சகமாக சொல்வது தான் இப்படத்தின் கதை.  இசையை நவநீத் அமைக்க, கலையை வினோத் குமார் கையாண்டுள்ளார்.

“பிறந்தநாள் வாழ்த்துகள்” படக்குழுவினர், காதலர் தினத்தில் தங்கள் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மிகவும் வித்யாசமான முறையில், Valentine’s Day நாளில்  வெளியிட்டுள்ளனர்!

“பிறந்தநாள் வாழ்த்துகள்” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. விரைவில் திரைக்கு வர,  தயாராகி வருகிறது.