‘சேபியன்ஸ் (SAPIENS) எண்டர்டெயின்மெண்ட்’ சார்பில், ஸ்ரீராம் சிவராமன் ‘பர்த் மார்க்’ திரைப்படத்தினை தயாரித்து, விக்ரம் ஸ்ரீதரனுடன் இணைந்து கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார். விக்ரம் ஸ்ரீதரன் இயக்கியிருக்கிறார்.
‘பர்த் மார்க்’ திரைப்படத்தினில், ஷபீர் கல்லரக்கல் (டான்ஸிங் ரோஸ்) மிர்னா ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்க, இவர்களுடன் தீப்தி, இந்திரஜித், பொற்கொடி, பி ஆர் வரலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அறுவை சிகிச்சையின்றி, பிற உபகரணங்களின்றி இயற்கை முறையினில், குழந்தை பெற்றுக்கொள்ளும் சம்பவத்தினை முன்னிறுத்தி, ஒரு உளவியல், மர்மத் த்ரில்லராக ‘பர்த் மார்க்’ உருவாகியுள்ளது.
‘பர்த் மார்க்’ திரைப்படம் குறித்து இயக்குனர் விக்ரம் ஸ்ரீதரன் கூறும்போது..,
1990 களில் நடக்கும் ஒரு சம்பவமாக ‘பர்த் மார்க்’ திரைப்படம், உருவகப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவ வீரர் டேனியல் (அ) டேனி, ஷபீர் கல்லரக்கல். இவர் தனது கர்ப்பமான மனைவி, ஜெனிபர் (அ) ஜெனி மிர்னாவுடன் தன்வந்த்ரி எனும் கிராமத்திற்கு குழந்தை பெற்றுக்கொள்வதற்காக வருகிறார். இருவரும் அங்கேயே தங்கியிருக்கின்றனர். அப்போது டேனியலுக்கு சில குழப்பங்களும், அந்த குழப்பங்களுக்கு தீர்வுகளும் கிடைக்கிறது. பிரசவத்தின் போது பெண்களுக்கு உடல் ரீதியான தொந்திரவுகளும், மன உளைச்சல்களும் ஏற்படுகிறது. அது ஆண்களுக்குமானது தான் என்பதை, உணரும் விதமாக உருவாக்கப்பட்டிருப்பது தான், பர்த் மார்க் திரைப்படம். படம் பார்ப்பவர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தினை கொடுக்கும். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை நடக்கும் மர்மமான நிகழ்வுகள் உங்களை சீட் நுனிக்கு கொண்டு வருவது உறுதி!” ஷபீர், மிர்னா இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். அவர்களின் நடிப்பினை ரசிகர்கள் நிச்சயமாக பாராட்டுவார்கள். என்றார், படத்தின் இயக்குனர் விக்ரம் ஶ்ரீதரன்.
மேலும், அவர் கூறும்போது..,
தமிழ்நாடு மற்றும் கேரளா இடையே அமைந்துள்ள ‘மறையூர்’ கிராமத்தில், செட் அமைக்கப்பட்டு, படப்பிடிப்பு நடத்தப் பட்டுள்ளதாகவும், அதுவே, திரைக்கதையில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் கூறினார்.
அனுசுயா வாசுதேவன் (கூடுதல் திரைக்கதை), விஷால் சந்திரசேகர் (இசை), உதய் தங்கவேல் (ஒளிப்பதிவு), இனியவன் பாண்டியன் (எடிட்டர்), ஸ்ருதி கண்ணத் (காஸ்ட்யூம் டிசைனர்).
‘பர்த் மார்க்’ திரைப்படம், வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது .