விஜய்சேதுபதி நடிப்பில் ஒரு உண்மைச் சம்பவத்தை. ‘க/பெ ரணசிங்கம்’ என்ற பெயரில் படமாக்கி பாராட்டு பெற்றவர், விருமாண்டி. இவர் மீண்டும் ஒரு உண்மை சம்பவத்தை படமாக்க இருக்கிறார். ஆர்.விஸ்வநாதன், பரதன் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார்.
இந்தப் படம் 1975-ம் ஆண்டு திரையுலகில் நடந்த, ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது. இந்தப்படத்தின் கதையைக் கேட்டவுடன், சசிகுமார் நடிப்பதற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.
வைரமுத்து பாடல்களை எழுத, ஒளிப்பதி செய்கிறார் என்.கே.ஏகாம்பரம், எடிட்டராக டி.சிவாநாதீஸ்வரன், இசையமைப்பாளராக ஜிப்ரான் ஆகியோர் பணிபுரிகிறார்கள்.
ஏப்ரலில் தொடங்கும் படப்பிடிப்பு செப்டெம்பர் மாதம் முடிவடைகிறது. சசிகுமாருடன் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது.