ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான், இயக்குநர் ஹலிதா ஷமீமின் ‘மின்மினி’ படத்தில், இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இதை மின்மினி படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.

‘மின்மினி’ படத்தை ஹலிதா ஷமீம், எழுதி இயக்குகிறார். ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ‘ஆங்கர் பே ஸ்டுடியோ’வுடன் இணைந்து ‘மின்மினி’படத்தைத் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் எஸ்தர் அனில், பிரவின் கிஷோர், கௌரவ் காளை, பிரவின் மற்றும் கௌரவ் ஆகியோர் முதன்மை நடிகர்களாக நடித்துள்ளனர்.

விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற ‘பூவரசம் பீப்பி’, ’சில்லு கருப்பட்டி’, ’ஏலே’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஹலிதா ஷமீம் மின்மினி படத்தை இயக்குவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.