ஃபர்ஸ்ட் ஹாஃப் அதிதியோட அலப்பறை…'(ஒன்ஸ்மோர்’ விமர்சனம்!) செகண்ட் ஹாஃப் போரடிச்ச பிளாஷ்பேக்!

A Classic Youth Rom-Com Missing Its Core Soul

லவ் ஃபெயிலியர் ஆகி, ‘தேவதாஸ்’ ரேஞ்சுக்கு தாடி வச்சுக்கிட்டு, ‘வாழ்க்கையே வெறுத்துப் போச்சுடா’னு தமக்குள்ளேயே ஒரு தனி உலகத்தைச் சுருக்கிக்கிட்டு வாழ்ந்து வர்ற ஒரு சோகமான விரக்தி இளைஞனா நம்ம அர்ஜுன் தாஸ் களம் இறங்கியிருக்காரு. தம்பியோட இந்த இக்கட்டான லோன்லி மூடைத் தற்செயலா பார்க்குற நம்ம துள்ளல் நாயகி அதிதி சங்கர், அர்ஜுன் தாஸ் மேல செமயா லவ் ஆகி, அவரை துரத்தித் துரத்திக் காதலிக்கத் தொடங்குறாங்க. ஆரம்பத்துல பழைய எக்ஸ்-லவ்வர் நினைவுகள்ல இருந்து வெளில வர முடியாம அர்ஜுன் தாஸ் ‘நோ’ சொன்னாலும், அதிதியோட ஓவர் டைம் காதலால் தம்பியோட அசல் மனசு மெல்ல மாறுது. ஒருகட்டத்துல பழைய சோகங்களை ஓரமா வச்சுட்டு, அதிதியோட லவ்விற்கு கிரீன் சிக்னல் காட்டி, ரெண்டு பேரும் பயங்கரமா லவ் பண்ணத் தொடங்குறாங்க.

இவங்களோட காதலுக்கு இருதரப்பு ஃபேமிலியும் ஓகே சொல்ல, ரெண்டு பேருக்கும் மிகக் கோலாகலமா நிச்சயதார்த்த விழாவும் நடக்குது. ஆனா, அந்த தருணத்துல தான் அர்ஜுன் தாஸோட லைஃப்ல ஒரு மாபெரும் இன்டர்வல் ட்விஸ்ட் ஏற்படுது. அவரோட லைஃப்ல இருந்து கடந்த 8 வருஷத்துக்கு முன்னாடியே டாட்டா காட்டிட்டுப் பிரிஞ்சு போன எக்ஸ்-கேர்ள் பிரண்டான சோனா ஒலிக்கல், திடீர்னு அர்ஜுன் தாஸோட மொபைலுக்குக் கூப்பிட்டு, ‘ உன்கிட்ட ஒரு முக்கியமான மேட்டர் பேசணும், இப்பவே நேரில் உடனே மீட் பண்ணனும்’னு சர்ப்ரைஸ் கோரிக்கை வைக்கிறாங்க.

லாங் கேப்புக்கு அப்புறம் திடீர்னு எக்ஸ்-லவ்வர் கூப்பிட்டதும், அர்ஜுன் தாஸ் தியேட்டர்ல இருக்குற சனங்க பதறுற மாதிரி அவங்களை நேரில் பார்க்க ஓடுறாரு. அந்த மீட்டிங்ல, அன்னைக்கு தங்களைப் பிரிஞ்சு போனதுக்கான அசல் மற்றும் ஷாக்கிங்கான காரணத்தை சோனா ஒலிக்கல் விவரிக்க, அதைக்கேட்கும் அர்ஜுன் தாஸ் ஒட்டுமொத்தமா மைண்ட்-பிளாக் ஆகி செம குழப்பத்துக்கும் அதிர்ச்சிக்கும் ஆளாகுறாரு. தற்பொழுது கைகூடி வந்துள்ள புதிய மேரேஜ் லைஃபா, இல்ல 8 வருஷத்துக்குப் பின் தெரியவரும் பழைய லவ்வான்னு, ரெண்டுக்கும் நடுவுல மாட்டிட்டுத் தவிக்கும் அர்ஜுன் தாஸ் அடுத்து என்ன பண்ணப்போறாரு, அதிதி சங்கரோட லவ் என்னவாகுது, இந்த  சிக்கல்ல இருந்து அவர் எப்படி வெளில வரப்போறாருன்ற சஸ்பென்ஸ் திருப்பங்களோட க்ளைமாக்ஸ் தான் ‘ஒன்ஸ்மோர்’ படத்தோட மீதிக்கதை

இப்படத்தோட நாயகன் அர்ஜுன் தாஸ், வழக்கம் போல தம்பியோட டிரேட்மார்க் ஸ்டைல்ல இறுக்கமான முகபாவனையோடயும், சிரிக்கவே மறந்த ஒரு சீரியஸான முரட்டு முகத்தோடயும் வலம் வராரு.

ஃபர்ஸ்ட் ஹாஃப்ல கேரக்டரோட தேவைக்கு ஏத்த மாதிரி செம விரக்தியோட காணப்படும் அவரு, செகண்ட் ஹாஃப்ல ஒரு ரொமாண்டிக் ஹீரோவா களம் இறங்குறாரு. இருந்தாலும், அந்த ரொமாண்டிக் சீன்கள்ல கூட அவரோட பேக்ரவுண்ட் சோகத்தோட வடுக்கள் தான் முகம் முழுக்கத் தெரியுது.

ஆனா,  அதிதி சங்கர் அவரோட அசாத்திய நடிப்பால ஒட்டுமொத்தத் திரைக்கதையையும் சிங்கிள் ஆளா  தாங்கிப் பிடிச்சிருக்காங்க. லவ்ல வர்ற ரிஜெக்ஷன்களை எல்லாம் ரொம்ப கேஷுவலா எடுத்துக்கிட்டு, ஹீரோவை விரட்டி விரட்டிக் காதலிக்கும் ஒரு துருதுருப்பான கேரக்டரை அதிதி சங்கர் செம எதார்த்தமாகக் கையாண்டு, தன்னோட துள்ளலான பாடி லாங்குவேஜ் மூலமா படத்திற்கு  பலம் சேர்த்திருக்காங்க.

அதேசமயம், செகண்ட் ஹீரோயினா அறிமுகமாகியிருக்ககுற சோனா ஒலிக்கலுக்குத் திரைக்கதையில பெருசா வேலை ஏதும் இல்லை. அவங்க ஆரம்பத்துல எதற்காக அர்ஜுன் தாஸைக் காதலிச்சாங்க, அப்பறம் என்ன காரணத்துக்காகப் பிரிஞ்சு போனாங்க, மறுபடியும் இத்தனை வருஷம் கழிச்சு எதுக்காகத் தேடி வந்தாங்கன்ற முக்கியக் கேள்விகளுக்குத் திரைக்கதையில ஸ்ட்ராங்கான காரணங்கள் எதுவுமே இல்லை. இதனால, அவங்களோட கேரக்டர் டிசைன் ரொம்ப வீக்கா அமைந்து, பார்க்குறவங்களுக்குப் படத்தோட எவ்விதத்துலயும் ஒட்டாம ஒரு தனி டிராக்கா போயிட்டு ஏமாற்றமளிக்குது.

இப்படத்துல வர்ற டிராவிட் செல்வம், அனுஷா பிரபு, ஜகபர், மோனிஷ் எலமாரன், வர்ணிகா வரத், அருண்குமார் மணி மற்றும் செளந்தர்யா மனோகரன் உள்ளிட்ட பிரண்ட்ஸ் மற்றும் துணைக் கேரக்டர்கள் எல்லாரும் தங்களுக்குக் கொடுத்த வேலையைக் குறையேதுமில்லாம பக்காவா பண்ணியிருக்காங்க.

டெக்னிக்கல் டீமைப் பொறுத்தவரை, அரவிந்த் விஸ்வநாதனின் கேமரா கோணங்கள் ரொம்ப சிம்பிளா இருந்தாலும், ஹீரோவோட சோகமான மூடுக்கு ஏத்த மாதிரி படம் முழுக்கச் சற்றுப் பொலிவற்ற விண்டேஜ் டோன்லயே காட்டுறது பார்வையாளர்களுக்குக் கூடுதல் சோர்வைத் தருது.

ஹேஷாம் அப்துல் வஹாபின் இசையில உருவான சாங்ஸ் எல்லாமே ஹிட் ரகங்களா அமைந்த ட்ரீட்! ஆங்காங்கே ஸ்லோவா நகரும் திரைக்கதையால டயர்டாகும் ரசிகர்களுக்கு, அவரோட பாடல்களும், பிண்ணனி இசையும் தான் தியேட்டர்ல பெரிய எனர்ஜி பூஸ்டரா இருக்கு.

ஃபர்ஸ்ட் ஹாஃப்ல ஹீரோயினோட லவ், செகண்ட் ஹாஃப்ல ஹீரோவோட பிளாஷ்பேக் லவ்னு ரெண்டு டிராக்கா நகரும் கதையை, எந்தவிதமான சுவாரசியமோ அல்லது மனதைத் தொடும் ஃபீலோ இல்லாம ரொம்ப பிளாட்டா எடிட்டர் கட் பண்ணியிருக்கிறது படத்தோட பெரிய மைனஸ்.

ஏற்கனவே தமிழ் சினிமாவுல ஏகப்பட்ட தடவை பார்த்துப் பழகிய ஒரு சாதாரணக் காதல் கதைக்களமா இருந்தாலும், அதைத் தியேட்டர் ரசிகர்களுக்கு ஏத்த மாதிரி உணர்வுப்பூர்வமா கொடுக்க அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் தவறிட்டாரு. முக்கியமா செகண்ட் ஹாஃப்ல வர்ற அந்த பிளாஷ்பேக் லவ் மற்றும் பிரேக்கப் சீன்கள்ல எவ்வித இம்பேக்ட்டும் இல்லாம ரொம்ப மேலோட்டமா நகர்வது படத்தோட பலவீனம்.

அதிதி சங்கரோட துருதுருப்பான நடிப்பும், அர்ஜுன் தாஸோட அந்த சீரியஸ் மூடும், பிளாஷ்பேக்ல ஏதோ ஒரு பெரிய சஸ்பென்ஸ் இருக்குன்ற ஹைப் காரணமா ஃபர்ஸ்ட் ஹாஃப் ஓரளவுக்கு விறுவிறுப்பா நகர்ந்தாலும், செகண்ட் ஹாஃப் படம் ரசிகர்களோட அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாமல் பார்வையாளர்களைச் சோதித்து விடுகிறது.

சுருக்கமாகச் சொன்னால், ஃபர்ஸ்ட் ஹாஃப் கொடுத்த சுவாரசியத்தை செகண்ட் ஹாஃப்ல கோட்டை விட்ட இந்த ‘ஒன்ஸ்மோர்’, எதிர்பார்த்து ஏமாற்றமடையும் ஒரு ஆவரேஜ் ரகம்!