Aruvam Movie Review
இயக்குனர் பூபதி பாண்டியனின் உதவியாளர், சாய் சேகர் முதன் முதலில் இயக்கி, சித்தார்த், கேத்தரின் தெரெசா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘அருவம்’
‘அருவம்’ படத்தை ‘ட்ரைடன்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. எப்படி இருக்கிறது?
உணவுப்பண்டங்களை தன்னுடைய முகர்ந்து பார்க்கும் அபார திறமனால் கலப்பட பொருட்களை கண்டுபிடிக்கும் திறமைசாலி சித்தார்த். உணவு பாதுகாப்புத் துறையில் நேர்மையான அதிகாரி.
‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.’ என்ற குரலுக்கேற்றபடி அனைவரிடமும் நேசமுடன் பழகிவருபவர் கேத்தரின் தெரெசா. அரசுப்பள்ளியின் ஆசிரியை.
உணவுப்பொருட்களில் கலப்படம் செய்யும் பெரும்செல்வாக்கு படைத்த கபீர்சிங் மற்றும் அவரது கைத்தடிகளான ஸ்டன்ட் சில்வா, மதுசூதனன், நந்தகுமார் உள்ளிட்டவர்களை சட்டத்தின் முன்னிறுத்தி தண்டனை வாங்கித்தர முயற்சிக்கிறார்.
அதன் காரணமாக, கபீர்சிங்கின் கைத்தடிகளான ஸ்டன்ட் சில்வா, மதுசூதனன், நந்தகுமார் கோஷ்டிக்கும் சித்தார்த்திற்கும் நடக்கும் மோதலில் சித்தார்த் கொல்லப்படுகிறார்.
கொல்லப்பட்ட சித்தார்த் தன்னுடைய காதலி கேத்தரின் தெரெசாவின் உடம்புக்குள் புகுந்துகொண்டு கபீர்சிங்கையும் அவரது கோஷ்டியையும் போட்டுத்தள்ளுகிறார். இது தான் படத்தின் கதை!
சமூக அவலங்களில் ஒன்றாகிப்போன‘உணவு பொருட்களில் கலப்படம்’ என்ற விஷயத்தை கையிலெடுத்த இயக்குனர் சாய் சேகர், அதை எதிர்கொள்வதிலும், தீர்வு சொல்வதிலும் வழி தெரியாமல் விழிபிதுங்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் சாய் சேகர். பார்த்துப் பழகிபோன சுவாரஷ்யமில்லாத திரைக்கதை.
திரைக்கதைக்கு தேவையின்றி புகுத்தப்பட்ட பேய்… கேத்தரின் தெரேசாவின் முகர்ந்து பார்க்க முடியாத தன்மை என படத்தில் பல குறைகள்.
ஏகாம்பரம் ஒளிப்பதிவில்.. எஸ்.எஸ்.தமன் இசையில்.. கே.எல்.பிரவீன் எடிட்டிங் செய்திருக்க. வாரா… வாரம்… வந்து போகும் படங்களில் இந்த ‘அருவம்’ படமும் ஒன்று.